ஹே.. ஹே.. உனக்கு அறிவு இல்லையா? பெண் ஐஏஎஸ் அதிகாரியை திட்டி தீர்த்த அமைச்சர்.. ஷாக்
ஹைதராபாத்: மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை பார்த்து அமைச்சர் ஒருவர், ‛‛ஹே உனக்கு அறிவே இல்லையா?'' என கேள்வி கேட்டு திட்டித்தீர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அமைச்சரை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இவரது அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பொங்குலெட்டி சீனிவாச ரெட்டி உள்ளார்.

இந்நிலையில் தான் நேற்று தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் வெவ்வேறு நலத்திட்ட பணிகளை மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தொடங்கி வைத்தார். மல்டிபர்பஸ் பூங்கா, டாக்டர் பிஆர் அம்பேத்கர் மைதான வளாகம், ஸ்மார்ட் பள்ளி உள்ளிட்டவற்றை அவர் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், மாநில வருவய்த்துறை அமைச்சர் பொங்கலெட்டி சீனிவாச ரெட்டி, போக்குவரத்து அமைச்சர் பூனம் பிரபாகர் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமான அந்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் பொங்கலெட்டி சீனிவாச ரெட்டி கடும் கோபமடைந்தார்.
இதையடுத்து கரீம் நகர் மாவட்ட கலெக்டரான ஐஏஎஸ் அதிகாரி பமீலா சத்பதியை கடிந்து கொண்டார். ஐஏஎஸ் அதிகாரி பமீலா சத்பதியை பார்த்து,‛‛உனக்கு அறிவு என்பதே இல்லயா? என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? என்ன இது முட்டாள் தனமாக இருக்கிறது? எஸ்பி எங்கே? என்று கேள்வி கேட்டார். அதற்கு ஐஏஎஸ் அதிகாரி பதிலளிக்க முயன்றபோது மீண்டும் மீண்டும் டென்ஷனானார்.
அதோடு சுற்றி அனைவரும் நிற்க அவர் ஐஏஎஸ் அதிகாரி பமீலா சத்பதியை திட்டி தீர்த்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பவரி வருகிறது. ஐஏஎஸ் அதிகாரி பமீலா சத்பதியை பொதுவெளியில் அனைவரின் முன்பும் திட்டி தீர்த்த தெலுங்கானா அமைச்சர் பொங்கலெட்டி சீனிவாச ரெட்டிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications