சூட்டிங் ஸ்பாட்டில் இளம்பெண் பலாத்காரம்.. பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாய்ந்த வழக்கு
ஹைதராபாத்: சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து 21 வயது நிரம்பிய பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஜானி மாஸ்டர். இவரது முழுப்பெயர் செய்க் ஜானி பாஷா. இவர் தமிழில் நடிகர் விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

இவர் தெலுங்கு சினிமாவில் அதிகமாக பணியாற்றி வருகிறார். நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில் தான் ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம்பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அதாவது ஜானி மாஸ்டருடன் சேர்ந்து பணியாற்றியபோது அவர் சென்னை உள்பட பல சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பரபரப்பை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் சைபராபாத்தில் உள்ள ராய்துர்கம் போலீசில் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரில், ‛‛நான் கடந்த சில மாதங்களாக ஜானி மாஸ்டருடன் சில திரைப்படங்களில் பணியாற்றினே். அப்போது அவர் எனக்கு பாலியல் தொல்லை தந்தார். சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் நடந்த சூட்டிங்கின்போது பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் ஹைதராபாத்தில் நான் வசிக்கும் நார்சிங்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்தும் பலாத்காரம் செய்துள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் சட்டப்பிரிவு 376 (பலாத்காரம்), 506 (மிரட்டல்), 323 (வலுக்கட்டாயமாக காயப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் ஜானி மாஸ்டர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛பெண் அளித்த புகாரில் ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பெண் நார்சிங்கி பகுதியில் வசித்து வருகிறார். இதனால் அந்த வழக்கு நார்சிங்கி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி நார்சிங்கி போலீசார் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.
தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஜானி மாஸ்டர் இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2015ம் ஆண்டில் கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications