டிரஸ்ஸே இல்லாமல்.. காட்டுக்குள் நிர்வாணமாக தவித்த பெண்.. நடுங்க வைக்கும் தெலுங்கானா பலாத்காரம்

கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 4 பேரை சுட்டு பொசுக்கிகூட, சில காம வெறியர்கள் இன்னமும் அடங்காமல் இருக்கிறார்கள்.. காலேஜ் போய்விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பெண்ணை, 4 பேர் காட்டுக்குள் கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.. இதுகுறித்து அடுத்த பகீர் தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. இன்ஜினியரிங் கல்லூரி மாணவி... நேற்று முன்தினம் வழக்கம்போல் காலேஜுக்கு போய்விட்டு, வீட்டுக்கு ஒரு ஆட்டோவில் சென்றுள்ளார்.. ஹைதராபாத் புறநகர் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென நின்றுவிட்டது.

அப்போதுதான் என்ன ஆச்சு என்று மாணவி கேட்டதற்கு, 'ஏதோ ப்ராப்ளம் போல தெரியுது.. இப்போதைக்கு ஆட்டோவை எடுக்க முடியாது.. அதனால் வேற ஒரு வண்டியில் ஏற்றி அனுப்புகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.. அவர் ஆட்டோவை நிறுத்திய அந்த இடத்திலேயே ஒரு வேன் இருந்திருக்கிறது.

 பலாத்காரம்

பலாத்காரம்

வேறு வண்டிக்கு காத்திருக்காமல், உடனடியாக அந்த வேனில் ஏற்றி அனுப்பி வைத்தார்.. பிறகு தன்னுடைய ஆட்டோவை உடனடியாக ஸ்டார்ட் செய்து கொண்டு அந்த வேன் பின்னாடியே சென்றிருக்கிறார். அந்த ஆட்டோ டிரைவர் ஏற்கனவே கஞ்சா போதையில் இருந்திருக்கிறார்.. அந்த வேனுக்குள் 3 பேர் இருந்திருக்கிறார்கள்.. பிறகு கட்கேசர் என்ற இடம் வந்துள்ளது .

 காட்டுப்பகுதி

காட்டுப்பகுதி

இது ஒரு காட்டுப்பகுதி.. ஏற்கனவே புறநகர் பகுதியில் வந்து கொண்டிருந்த நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு விரைவாக ஓட்டி வந்துள்ளனர்.. அப்போதே மாணவி சுதாரித்து, வேற ரூட்டில் வேன் செல்கிறதே என்று கேட்டுள்ளார்.. ஆனால், அதுவரை பதில் எதுவுமே சொல்லாமல் இருந்த அவர்கள், காட்டுப்பகுதிக்கு வந்ததுமே, சரமாரியாக அடித்து வேனிலிருந்து வெளியே இழுத்துள்ளனர்.. அதற்குள் ஆட்டோ டிரைவரும் அங்கு வந்து சேர்ந்துவிடவும், 4 பேரும் சேர்ந்து காட்டுப் பகுதிக்கு இழுத்து சென்று மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

 நிர்வாணம்

நிர்வாணம்

அந்த பெண்ணின் டிரஸ் முழுவதையும் பிடுங்கி கொண்டு, அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.. அந்த வழியாக ஒரு பெண் சென்றபோதுதான், மாணவி டிரஸ் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ந்து போய், வேறு ஒரு டிரஸ் கொண்டு வந்து தந்துள்ளார்.. பிறகு போலீசுக்கு தகவல் சொல்லவும், போலீசார் விரைந்து வந்து பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்... இப்போது தீவிர சிகிச்சையில்தான் அந்த பெண் இருக்கிறார்.. உடனடியாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன..

 ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர்

அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்து, அதை வைத்து நேற்று முழுவதும் குற்றவாளிகளை போலீசார் தேடினர்.. சம்பந்தப்பட்ட 4 பேருமே அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் என்பது தெரியவந்தது. இதில் முதல் குற்றவாளியே அந்த ஆட்டோ டிரைவர் ராஜு ஆவார்.. அவரது நண்பர்கள் சிவா, பாஸ்கர், நாதன் போன்றோர் ஏற்கனவே அந்த பகுதியில் பரிச்சயம் என்பதால், விடிய விடிய தேடுதல் வேட்டை நடந்தது..

 6 பேர் கைது

6 பேர் கைது

இதில் ராஜு முதலில் சிக்கினார்.. அப்போதுதான், ஏற்கனவே 4 பேர் இல்லாமல் வேறு 2 பேர் இதில் சம்பந்தப்பட்டது தெரியவந்தது.. அவர்கள் பெயர் ரமேஷ், குமார் என்பது.. இதையடுத்து மொத்த பேரையும் போலீசார் இன்று காலையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் எண்ணம் பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள்.. 6 பேருமே ஆட்டோ டிரைவர்கள்.. இதில் ஒரு டிரைவர், பெண்ணுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் என்பதால், இது திட்டமிட்டு நடந்த பலாத்காரம் என்றே கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+