எளிமையான தலைவர்.. பழங்குடியின மக்களுடன் நடனம் ஆடிய தமிழிசை.. தெலுங்கானா மக்கள் பாராட்டு!
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழக பாஜக தலைவராக இருந்த போது மிகவும் எளிமையாக இருந்தார். தற்போது ஆளுநர் ஆன பின்பும் கூட அந்த குணத்தை கடைபிடிக்கிறார்.

ஆலோசனை செய்தார்
இந்த நிலையில் நேற்று ஆளுநர் தமிழிசை, தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் பழங்குடியின மக்களுடன் ஆலோசனை நடத்தினார். பழங்குடியின மக்களுக்கு செய்யப்பட வேண்டிய வளர்ச்சி திட்டங்கள், இடஒதுக்கீடு , நிதி ஒதுக்கீடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்தார்.

உணவு முறை
அதேபோல் அவரின் உணவு முறையை உலகம் முழுக்க கொண்டு செல்வது. தெலுங்கானாவில் மலை பகுதியில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது. அவர்களின் மருத்துவ முறையை உலகறிய செய்வது என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தினார்.

நடனம் ஆடினார்
அதன்பின் பத்ராச்சலம் மற்றும் நாகர்கர்ணூல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கோயா மற்றும் லம்பாடா மக்களுடன் நீண்ட நேரம் கலகலப்பாக உரையாடினார் தமிழிசை. பின் அவர்களுடன் சேர்ந்து கோயா இன மக்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி நடனம் ஆடினார். அவர் பழங்குடியின மக்களுடன் இயல்பாக பழகி, நடனம் ஆடியது எல்லோரையும் கவர்ந்தது.
|
கல்லூரி காலம்
அதன்பின் தன்னுடைய கல்லூரி காலத்தில் பழங்குடியின மக்களுக்கு எப்படி மருத்துவ உதவிகள் செய்தேன். அந்தமான் பழங்குடிகளின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்று பல விஷயங்களை தமிழிசை பகிர்ந்து கொண்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அணுகுவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறார் என்று தெலுங்கானா மக்கள் பாராட்டி உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications