தெலுங்கானாவின் தலைவிதி "இவங்க" கையில் தான்.. அடடே வசமாக மாட்டிய கேசிஆர்.. பெரிய சிக்கலாகுமே! பின்னணி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இந்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே தலைவிதியே ஒரு பிரிவினர் கையில் தான் இருக்கிறது. அங்கே இப்போது என்ன நிலையில், கேசிஆருக்கு என்ன பிரச்சினை என்பதைப் பார்க்கலாம்.
நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அங்கே இந்த முறை பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.

இந்தத் தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தெலுங்கானா: இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவில் இளைஞர்கள்தான் செல்வாக்கு செலுத்த உள்ளனர். சமீபத்திய வெளியான வாக்காளர் பட்டியலில் ஏழு லட்சம் பேர் முதல் முறையாக வாக்காளர்கள் ஆவர். மேலும், 35 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 30% பேர் இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இளைஞர்களைக் குறிவைத்து பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதாவது தெலுங்கானாவில் உள்ள 3.14 கோடி வாக்காளர்களில், ஏழு லட்சம் பேர் 18-19 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், 75 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் 35 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள். இது குறித்துத் தேர்தல் வல்லுநர்கள் கூறுகையில், "இளைஞர்கள் வாக்களிக்க எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். இதனால் இளைஞர்கள் வாக்கு ரொம்பவே முக்கியம்.
ஏன் முக்கியம்: இந்த முறை அரசியல் கட்சிகள் இளைஞர்களைக் கவர என்ன வாக்குறுதி அளிக்கப் போகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். இது மட்டுமின்றி அதிகப்படியான இளைஞர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும்" என்றார். இளைஞர்களுக்குப் போட்டியிட அதிகம் வாய்ப்பு கொடுத்தால், இளைஞர்கள் வாக்குகள் அதிகம் வரும் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
கட்சிகள் பிளான்: அனைத்து தொகுதியிலும் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு இளைஞர்கள் இருப்பதால், அனைத்து அரசியல் கட்சிகளின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. காங்கிரஸ் ஏற்கனவே 'இளைஞர் பிரகடனத்தை' அறிவித்துள்ளது. மேலும், ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இது தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் பாஜக வழக்கம் போல இளைஞர்களின் நாயகனாகப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறது. பல இளைஞர்கள், குறிப்பாக ஓபிசி பிரிவினர் மோடியின் ஏழ்மை பின்னணியை தங்களுடன் கனெக்ட் செய்து கொள்வதாகவும் இதன் காரணமாகவே பாஜக தொடர்ந்து மோடியை இளைஞர்களின் ஐக்கான வைத்து பிரசாரம் செய்வதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வசமாக மாட்டிய கேசிஆர்: தெலுங்கானாவில் க்ரூப் ஒன் தேர்வில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டிருந்தது. க்ரூப் 1 தேர்வு கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இதனிடையே காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. பிஆர்எஸ் கட்சி இளைஞர்கள் எதிர்காலத்தையே நாசம் செய்வது கூறி இருவரும் பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
அதேநேரம் ஆளும் பிஆர்எஸ் கட்சியும் இளைஞர்களையே குறிவைக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு பிஆர்எஸ் செய்த நலத்திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும், முதல்வர் கேசிஆரின் மகனும் அமைச்சருமான கேடி ராமராவ் ஐடி துறையில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் இதனால் அதிகரித்துள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதில் யாருக்கு இளைஞர்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே பார்க்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications