கல்லீரலுக்குள் ஊசி! கண்களில் வழிந்த ரத்தம்.. நடிகர் ஸ்ரீஹரி எப்படி இறந்தார்? டிஸ்கோ சாந்தி கண்ணீர்
ஹைதராபாத்: கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியை எல்லோருக்கும் தெரியும். அது போல் அவருடைய கணவர் ஸ்ரீஹரியை தெரியுமா? அவரது மரணம் எப்படிப்பட்டது என்பது தெரியுமா?
தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடனம் ஆடி வந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. மறைந்த நடிகர் சி.எல். ஆனந்தனின் மகளான அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நிறைய படங்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
இவர் 1996ஆ் ஆண்டு தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை மணந்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர் தெலுங்கு திரையுலகில் கொடிக் கட்டி பறந்தவர். தமிழில் கூட சில படங்களில் நடித்துள்ளார். அவர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஐபிஎஸ் அதிகாரி தேவராஜ் என்ற கேரக்டர் நடித்திருப்பார்.

2013 இல் மரணம்: இந்த நிலையில் பிரபுதேவா இயக்கிய ராம்போ ராஜ்குமார் படத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீஹரி நடித்துக் கொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கல்லீரல் பிரச்சினை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டிஸ்கோ சாந்தி: இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். அவரது மரணம் டிஸ்கோ சாந்தியை மிகவும் புரட்டி போட்டது. அவர் அண்மைக்காலமாக டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் நியூஸ் கிளிட்ஸ் எனும் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தனது கணவருக்கு மும்பையில் மருத்துவமனையில் ஒரு ஊசி போடப்பட்டதுதான் அவரது இறப்புக்கு காரணம்.
ஐசியூவில் நடந்தது என்ன: அங்கு இந்தி மொழி எனக்கு புரியவில்லை. எனது பாவாவை ஐசியுவில் பார்ப்பதற்காக நைசாக உள்ளே போனேன். அப்போது பாவாவுக்கு கண்கள், காதுகள், மூக்கில் இருந்தெல்லாம் ரத்தம் வெளியேறியது. அவர் படுத்திருந்த படுக்கை முழுவதும் ரத்தம் படிந்திருந்தது. இதனால் நான் சப்தமிட்டேன். அப்போது மருத்துவர்கள் உள்ளே வந்தனர். அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்ட போது டூட்டி டாக்டர்களில் ஒருவர் தெலுங்குகாரர், மற்றொருவர் மலையாளி.
ஸ்ரீஹரிக்கு என்ன ஆச்சு: அவர்கள் ஏதோ சொல்ல வந்த போது அங்கிருந்த சீஃப் டாக்டர் அவர்களை இந்தியில் திட்டியவுடன் அவர்கள் சொல்லவந்ததை நிறுத்திவிட்டார்கள் என்றார். அப்படி ஸ்ரீஹரிக்கு என்னதான் ஆச்சு என்பதை ஏற்கெனவே டிஸ்கோ சாந்தி கூறியிருந்ததை பார்ப்போம். மும்பையில் ஷூட்டிங் முடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு வந்த ஸ்ரீஹரிக்கு திடீரென வியர்வை ஏற்பட்டது. நாங்கள் ஹோட்டல் வரவேற்பாளரை அழைத்து மருத்துவரை அழைத்து வர சொன்னோம்.
கல்லீரலுக்கு ஊசி அப்போது மருத்துவர் வந்து பரிசோதனை செய்து ஒரு ஊசி போட்டால் சரியாகும் என கூறி ஊசி போட்டார். பின்னர் நான் உடை மாற்றி வருவதற்குள் அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஐசியூவில் அவருக்கு சலைன் போடப்பட்டது. அப்போது என்னை உள்ளே அனுமதிக்கவில்லை, இதனால் ஐசியூவில் பதுங்கிக் கொண்டேன். திடீரென பாவா ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இந்தி தெரியாது: எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. மருத்துவர்கள் இந்தியில் ஏதோ பேசிக் கொண்டனர். எனக்கு இந்தி தெரியாது. நான் வெளியே தள்ளப்பட்டேன். சில மருத்துவர்கள் அவருக்கு ஏதோ தவறு நடந்ததாக தெரிவித்தனர். எனக்கு தெரிந்து அவரது வாயில் ஒரு குழாய் போடப்பட்டது. அது உள்ளே சென்று கல்லீரலை துளைத்தது. அதனால்தான் ரத்தம் வெளியேறியது. மாரடைப்பு வந்திருந்தால் எப்படி இவ்வளவு ரத்தம் வெளியேறும். டாக்டர்கள் குழாயை செருகும் போது அவர் நகர்ந்தாரா அல்லது அதை தவறாக செருகினார்கள என்பது யாருக்கும் தெரியாது என பாவாவின் தனிப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு ஸ்ரீஹரி மரணம் குறித்து டிஸ்கோ சாந்தி கூறியிருந்தார்.
3 கிராமங்களை தத்தெடுத்த நடிகர்: ஸ்ரீஹரி எப்போதும் ஷூட்டிங்கில் யாராவது படிப்பு செலவவுக்கு உதவி கேட்டால் உடனே கொடுத்துவிடுவாராம். அது போல் ஆந்திராவில் ஒரு 3 கிராமங்களில் தண்ணீரில் ஏதோ ஒரு தாது கலந்து வருவதால் அதை குடிக்கும் மக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மாற்றுத்திறனாளியாக பிறப்பதாக டிஸ்கோ சாந்திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் ஸ்ரீஹரியிடம் கூறி அந்த 3 கிராமங்களை தத்தெடுக்கும் ஐடியாவை கொடுத்தாராம். அதன் பிறகு அங்கு தண்ணீரை சுத்திகரிக்கும் ஆலைகள் வைக்கப்பட்டதும் அந்த கிராமத்தினருக்கு நல்ல குடிநீர் கிடைப்பதாகவும் அந்த ஊரில் பிறக்கும் குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறந்தார்கள் என்றும் இவர்களை பார்த்துதான் நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்டோர் கிராமங்களை தத்தெடுக்கும் முயற்சியை செய்ததாக டிஸ்கோ சாந்தி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications