"பிரியாணி ஏன் சூடா இல்லை.." 90 ஆண்டு பழமையான ஹைதராபாத் ஹோட்டலில் அடிதடி ரகளை.. அடுத்து நடந்த பகீர்
ஹைதராபாத்: புத்தாண்டு தினத்தில் ஹைதராபாத்தில் இருக்கும் பிரபல ஹோட்டலில் பிரியாணிக்காக மிக மோசமான மோதல் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
இன்று நாம் அனைவரும் 2024 புத்தாண்டை வரவேற்றோம். இந்தியா உட்பட உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வகையில் நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்றனர்.

அதேநேரம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சில இடங்களில் அடிதடி சம்பவங்களும் நடக்கும். இதற்கிடையே புத்தாண்டு தினத்தன்று அப்படியொரு மிக மோசமான சம்பவம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
பழமையான ஹோட்டல்: ஹைதராபாத்தில் உள்ள பழமையான ஹோட்டல்களில் ஒன்று கிராண்ட் ஹோட்டல்.. இது 1935ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத்தில் உள்ள அபிட்ஸில் என்ற இடத்தில் இயங்கி வருகிறது. பழமையான இந்த உணவகத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். புத்தாண்டு தினத்திலும் அதே போலத் தான் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது பிரியாணியைச் சூடாகப் பரிமாறவில்லை என்று கூறி சிலர் அங்கே பிரச்சினை செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வெயிட்டரை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பணியாளர்களும் பதிலுக்கு வாடிக்கையாளர்களைத் தாக்கியுள்ளனர். இதனால் அங்கே பெரும் பரபர்புப ஏற்பட்டது.
அடிதடி: இதையடுத்து உடனடியாக இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் ஹோட்டல் நிர்வாக உறுப்பினர்கள் வாடிக்கையாளர்கள் மீது தடிகள் மற்றும் சேர்களை கொண்டு தாக்குவது தெளிவாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது ஹைதராபாத் போலீசார் இரண்டு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் ஹோட்டல் நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் என இரு தரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
என்ன நடந்தது: இது தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் துணை ஆணையர் கூறுகையில், "பிரியாணி சூடாக இல்லை என்று இந்த பிரச்சினை நடந்துள்ளது. முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென அந்த வாடிக்கையாளர் ஹோட்டல் ஊழியரைத் தாக்கியதே இந்த பிரச்சினைக்குக் காரணம்.. அதைத் தொடர்ந்து, மற்ற ஊழியர்கள் சேர்ந்து வாடிக்கையாளர்களைத் தாக்கத் தொடங்கியதால் பிரச்சினை மோசமானது" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications