மனித தலையை.. அடுப்பில் சுட்டு.. பிய்த்து பிய்த்து சாப்பிட்ட சைக்கோ ஜோடி.. பாழடைந்த கட்டிடத்தில் ஷாக்
மனித தலையை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டார்
ஹைதராபாத்: மனிதனின் தலையை அடுப்பில் சுட்டு எடுத்து.. அதை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர் ஒரு ஆணும், பெண்ணும்.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இங்குள்ள ரெல்லி வீதியில் வசித்து வருபவர் சுப்ரமணியம்.. இவர் தன் வீட்டு பக்கத்தில் ஒரு கோணிப்பை இருந்ததை பார்த்தார்.

அதனால் அதற்குள் என்ன இருக்கிறது என்று பிரித்தபோது, உள்ளே மனித தலை கிடப்பதை கண்டு அலறினார்.. பிறகு அதை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு பயத்தில் வீட்டுக்குள் ஓடிவிட்டார்.. வீட்டில் இருந்தபடியே அந்த பையை கண்காணித்து கொண்டே இருந்தார்.
அப்போதுதான் ராஜு அங்கே வந்தார்.. அவர் ஒரு இளைஞர்.. அங்குள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில்தான் ராஜு வசித்து வருவாராம்.. தெருவில் நடந்து வந்த ராஜு, அந்த கோணிப்பையை திறந்து பார்த்துவிட்டு, அதை எடுத்து கொண்டு அந்த கட்டிடத்துக்குள் சென்றுவிட்டார். இதை பார்த்ததும் சுப்ரமணிக்கு தூக்கி வாரிப்போட்டது.
அதனால் அந்த கோணிப்பையை எடுத்து கொண்டு போய் ராஜு என்ன செய்கிறார் என்பதை அந்த கட்டிடத்தின் ஜன்னல் வழியாக பார்த்தார்.. அடுப்பை பற்ற வைத்து, அதில் இந்த மனித தலையை எடுத்து நெருப்பில் சுட ஆரம்பித்தார் ராஜு.. அடுப்பில் சுட்டு கொண்டிருக்கும்போதே ஒரு பெண் அங்கு வந்தார்.. அவரும், ராஜுவும் சேர்ந்து தீயில் சுட்ட தலையை ஆளுக்கு பாதி பிய்த்து திண்ண ஆரம்பித்துவிட்டனர்.
இதை பார்த்ததும் அள்ளுகிளம்பி விட்டது சுப்ரமணிக்கு.. கை, கால் உதறல் எடுத்து கொண்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் ஓடிப்போய் விஷயத்தை சொன்னார்.. இதை கேட்டு ஷாக் ஆன போலீசாரும் விரைந்து வந்து அந்த கட்டிடத்தில் தலையை சாப்பிட்டு கொண்டிருந்த ராஜுவையும், அந்த பெண்ணையும் பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.
5 வருஷத்துக்கு முன்பு ராஜுவின் அப்பா இறந்துவிட்டாராம்.. அப்போதுமுதல் ராஜு வீட்டை விட்டு வெளியேறி போதை பழக்கங்களில் இறங்கிவிட்டார்.. அந்த போதை பொருளை வாங்குவதற்காக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டும் வந்துள்ளார்.. மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு ராஜுவிடம் விசாரணை நடந்து வருகிறது.. அந்த மனித தலை யாருடையது? யார் கொன்றது? எங்கிருந்து ராஜுவுக்கு கிடைத்தது? ராஜுவே யாரையாவது கொன்றுவிட்டாரா? அல்லது சுடுகாட்டில் இருந்து ஏதாவது ஒரு பிணத்தை எடுத்து கொண்டு வந்தாரா? என்கிற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications