ஒரு வன்புணர்வு.. அதன்பின் கொடூர கொலை.. குற்றவாளியை பிடிக்க களத்தில் 100 போலீஸ்- என்கவுண்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து பின்னர் கொலை செய்த நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் ஹைதராபாத் அருகே இருக்கும் சிங்கரேணி காலனி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் காணாமல் போய்விட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இரண்டு நாட்களாக போலீசார் அந்த சிறுமியை தேடி வந்தனர். கடந்த 12ம் தேதி இரவு அந்த சிறுமியின் உடல் அருகில் இருந்த வீடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் பல இடங்களில் ரத்தத்தோடு சிறுமி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

காணவில்லை?

காணவில்லை?

உடலில் பெட்ஷீட் சுற்றப்பட்டு மோசமான நிலையில் அந்த சிறுமி இறந்து கிடந்தார். இதையடுத்து உடனடியாக அந்த சிறுமியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு போலீசார் உடனே வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வந்தனர். அந்த பகுதி மக்களிடையே போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். அந்த சிறுமி அந்த அறைக்கு வந்தது எப்படி என்று விசாரித்து வந்தனர்.

சந்தேகம்

சந்தேகம்

அந்த சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் 13ம் தேதி வெளியானது. இதில் அந்த சிறுமி மோசமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் கொலைக்கு முன் பல முறை அந்த சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு ஆளானதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டில் பள்ளிக்கொண்டா ராஜு என்ற நபர் வசித்து வந்தார்.பள்ளிக்கொண்டா ராஜுவிற்கு 30 வயதாகிறது.

தப்பினார்

தப்பினார்

இவர்தான் அந்த சிறுமியை வன்புணர்வு செய்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுமியை தூக்கி வந்து இப்படி கொன்று இருக்கலாம் என்று கூறப்பட்டது. பின்னர் போலீஸ் விசாரணையில் இவர்தான் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருக்கும் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக பல தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

குழப்பம்

குழப்பம்

முதலில் இவரை கைது செய்யப்பட்டதாக தெலுங்கானா அமைச்சர் கேடி ராமராவ் தெரிவித்தார். ஆனால் இதில் உண்மை இல்லை என்று பின்பு தெரிய வந்தது. இந்த நிலையில் இவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள். இவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவரின் இருப்பிடத்தை அல்லது இவர் குறித்து தகவல்களை அறிவிக்கும் நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று போலீஸ் சன்மானம் அறிவித்துள்ளது.

என்கவுண்டர்

என்கவுண்டர்

இவரை என்கவுண்டர் செய்யும் திட்டத்திலும் ஹைதராபாத் போலீஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஒரு கொலையாளி, சிறுமியை வன்புணர்வு செய்து கொன்றுள்ளார். அவரை பிடித்ததும் என்கவுண்டர் செய்ய உத்தரவிட்டு உள்ளோம் என்று தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனால் இவரை தேடி கண்டுபிடிக்க போலீசார் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+