என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும்.. போலீசுக்கு நன்றி.. ஹைதராபாத் மருத்துவரின் தந்தை கண்ணீர்!
ஹைதராபாத் என்கவுண்டர் காரணமாக என்னுடைய மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்று கொல்லப்பட்ட ஹைதராபாத் மருத்துவரின் தந்தை தற்போது பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத் என்கவுண்டர் காரணமாக என்னுடைய மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்று கொல்லப்பட்ட ஹைதராபாத் மருத்துவரின் தந்தை தற்போது பேட்டி அளித்துள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். தெலுங்கானா போலீஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது. ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார்.

பேட்டி அளித்தார்
இந்த என்கவுண்டர் தொடர்பாக கொல்லப்பட்ட ஹைதராபாத் மருத்துவரின் தந்தை தற்போது பேட்டி அளித்துள்ளார். அதில், 4 பேரின் என்கவுண்டர் நிம்மதி தருகிறது. அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் என் மனம் நிம்மதி அடைகிறது.என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும்.
|
வேதனை
என் மகள் அனுபவித்த வேதனைக்கு பதில் கிடைத்துள்ளது. இது மற்றவர்களுக்கும் சரியான உதாரணமாக இருக்கும். தெலுங்கானா போலீஸ் இதில் வேகமாக செயல்பட்டது. கமிஷ்னர் விசி சஜ்னார் மிகவும் துரிதமாக செயல்பட்டார்.

மிக்க நன்றி
போலீசுக்கு மிக்க நன்றி. இந்த கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மீடியாதான். அவர்கள்தான் இதை இந்தியா முழுக்க கொண்டு சென்றது. அவர்களுக்கு மிக்க நன்றி, என்று ஹைதராபாத் மருத்துவரின் தந்தை தற்போது பேட்டி அளித்துள்ளார்.

புகார்
முன்னதாக இந்த வழக்கில் போலீசார் சரியாக செயல்படவில்லை. போலீஸ் எங்கள் எப்ஐஆரை பதிவு செய்யவில்லை என்று ஹைதராபாத் மருத்துவரின் தந்தை புகார் வைத்து இருந்தார். இதனால் மூன்று போலீசார் அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications