"கேசிஆர் vs காங்.!" தெலுங்கானாவில் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு! 70.60% வாக்குகள் பதிவு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 70.60% வாக்குகள் பதிவாகியுள்ளது.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கு அனைத்து கட்சிகளுமே ரெடியாக ஆரம்பித்துவிட்டனர். அந்த லோக்சபா தேர்தலுக்கு அரையிறுதியாக இப்போது நடக்கும் சட்டசபைத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்கெடுப்பு நடந்து முடிந்துவிட்டது. இன்று தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 119 இடங்கள் இருக்கிறது. அங்கே எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 60 இடங்களில் வெல்ல வேண்டும்.
இப்போது அங்கே பிஆர்எஸ் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் கேசிஆர் முதல்வராக இருக்கிறார். அங்கே பிஆர்எஸ் கட்சிக்கு எதிராகக் காங்கிரஸ் இறங்குகிறது. இது தவிர பாஜக, ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி ஆகியவை களத்தில் இருக்கிறது.
தெலுங்கானாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சியின் வசம் 88 இடங்களில் வென்றது. அதேநேரம் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால், இந்த முறை காங்கிரஸ் அங்கே கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா, பிரியங்கா காந்தி எனப் பல முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். முதல்வர் கே.சி.ஆர், அவரது மகன் கே.டி.ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி, பாஜக மக்களவை உறுப்பினர்கள் பண்டி சஞ்சய் குமார், டி.அரவிந்த் உள்பட மொத்தம் 2,290 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் எதிர்காலத்தை இன்று களத்தில் இருக்கும் 3.2 கோடி பேர் தீர்மானிக்க உள்ளனர். மாநிலம் முழுக்க வாக்களிக்க 35,655 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. வாக்களார்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். மொத்தம் 119 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 70.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக அத்திப்பளி என்ற தொகுதியில் 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications