பாகுபலி பங்களா! பாத்ரூம் தண்ணீர் தொட்டி ரூ.25 லட்சம்! ஆட்சி மாறியதும் ஜெகன் மோகன் மாட்டிக்கிட்டாரே
ஹைதராபாத்: விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டாவில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் அரசாங்கத்தின் போது கட்டப்பட்ட ஆடம்பரமான பங்களாவின் புகைப்படங்களை X இல் தெலுங்கு தேசம் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் பகிர்ந்துள்ளது.
தெலுங்கு எம்எல்ஏ காந்தா ஸ்ரீனிவாஸ் உள்ளூர் தலைவர்களுடன் அந்த பிரமாண்டமான மாளிகையை பார்வையிட்டார். கட்டிட உட்புறங்கள் மற்றும் கட்டிடத்தின் ஒவ்வொரு அறைகள் என்று மொத்தமாக எல்லாம் சேர்த்து சுமார் 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பாகுபலி பங்களா: ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அரசு விசாகப்பட்டினத்தில் உள்ள அழகிய கடற்கரை பகுதியில் ருஷிகொண்டா மலைகளின் அருகே பிரம்மாண்டமான பங்களா வளாகத்தை கட்டி வந்தது.
ஜெகன் மோகன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையுடன் ஜெகன் அரசு அரண்மனை பங்களா வளாகத்தை கட்டி வந்தது. இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் அவர் அங்கேயே தங்குவார். அங்கேயே தனது முகாம் அலுவலகத்தை அங்கிருந்து இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மிக பிரம்மாண்டம்: ஒருவேளை, இன்னும் 10 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்யலாம் என்று ஜெகன் மோகன் நினைத்திருக்கலாம். எனவே, அவருக்கு அவரது அந்தஸ்துக்கு ஏற்ற மிகப்பெரிய பங்களா தேவைப்பட்டது.
இதை ஜெகனின் அரசு இல்லம் என்று வெளிப்படையாக கூறாமல் இருந்தது. அதிகாரிகள் அதை ஒரு ஆடம்பரமான சுற்றுலா விடுதியாகக் காட்ட முயன்றாலும், அந்த அரண்மனை ஜெகனின் முகாம் அலுவலகம் மற்றும் வசிப்பிடத்திற்காக கட்டப்பட்டது என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்தது. எனவே, அவர் ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்பு காரணங்களுக்காக யாரும் பங்களா அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அந்த பங்களா தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய அரசு பங்களா ஆகும். உள்ளே வெளிநாட்டு பொருட்கள் தொடங்கி இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடிகள், கிரானைட்கள் என்று மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் பிரம்மாண்டத்தை கூற வேண்டும் என்றால் அங்கே கட்டப்பட்டு உள்ள பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.
தற்போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ருஷிகொண்டா அரண்மனை குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநில அரசு மாறி உள்ள நிலையில் அந்த பங்களாவின் ரகசியங்கள் வெளியே வந்துள்ளன. ஜெகன் இப்போது அங்கு வந்து தங்குவதற்காக சுமார் 500 கோடி ரூபாய் பொதுப் பணத்தை முன்னாள் முதல்வர் வீணடித்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
சோதனை செய்தார்: தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ காந்தா ஸ்ரீனிவாஸ் உள்ளூர் தலைவர்களுடன் அந்த பிரமாண்டமான மாளிகையை பார்வையிட்டார். கட்டிட உட்புறங்கள் மற்றும் கட்டிடத்தின் ஒவ்வொரு அறைகள் என்று மொத்தமாக எல்லாம் சேர்த்து சுமார் 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அங்கே சோதனை செய்த தெலுங்கு தேசம் நிர்வாகிகள், " ஒய்.எஸ்.ஆர்.சி ஆட்சியின் போது இந்த பிரமாண்டமான வீடு முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக பயன்படுத்தப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. கட்டிடம் கட்டுவதையும் மூடி மறைத்து வைத்திருந்தனர்.
யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இந்த பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட்டது. ஜெகன் தலைமையிலான YSRC அரசாங்கம், பிரஜா வேதிகா என்ற பெயரில் இந்த கட்டிடத்தை கட்டி வந்தது. மேலும் இந்தக் கட்டிடத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதிகள் என்ன என்பதையும், அது ஏன் என்பதைத் தெரிவிக்கவும் விசாரித்து வருகிறோம். எல்லா விதிகளையும் மீறி... பல நூறு கோடிகளை செலவு செய்து இந்த கட்டிடத்தை கட்டி வருகிறார்.
இதை பற்றி முறையாக விசாரணை செய்யப்படும். இந்த கட்டிடத்தை என்ன செய்வது என்றும் விசாரணை செய்யப்படும் என்று தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications