ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை அதிர வைத்த முதியவர்.. விடாமல் ஓடி வந்து.. நடந்ததை பாருங்க

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சட்டசபை மற்றும் லோக்சபா என இரு தேர்தல்களை எதிர்கொள்ளும் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். ஏசி பேருந்தில் சென்று கொண்டிருந்த ஜெகனை சந்திக்க இஸ்லாமிய முதியவர் ஓடிவந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய நிலையில், ஜெகன் உடனே பேருந்தை நிறுத்த சொல்லி கீழே இறங்கி சந்தித்தார்.

ஆந்திராவில் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அங்கு சட்டசபையில் 175 இடங்கள் உள்ளன. 25 லோக்சபா தொகுதி மட்டுமின்றி, அங்கு சட்டசபை பதவி காலம் முடிந்ததால் சட்டசபை தேர்தலும் ஒரே நாளில் நடைபெற போகிறது. ஆந்திராவில் வரும் மே 13ம்தேதி சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற போகிறது.

Old Man Rushes to Meet Andhra Chief Minister Jagan Mohan Reddy Watch Video

ஆந்திரா மாநிலத்தில் ஆளும் கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இருக்கிறது. ஆந்திராவில் முதல்வராக இருந்த ராஜசேகர் ரெட்டி விபத்தில் மரணம் அடைந்த போது அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் மறுத்தது. அதுமட்டுமின்றி அவரை ஊழல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது.. இதனால் பொங்கி எழுந்த ராஜேகர் ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் ஆரம்பித்த கட்சி தான் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ்..

ஆந்திராவில் இருந்த காங்கிரஸ் அடியோடு இவர் பக்கம் போனது..ஆந்திராவில் இப்போது வலுவான ஆளும் கட்சியாக இருக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக இருக்கிறார்.. ஐந்து ஆண்டு பதவி காலம் முடிந்த நிலையில் தேர்தலை சந்தித்துள்ளார்.

இந்த முறை எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு அவருக்கு எதிராக நிற்கின்றன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யான், பாஜக ஆகியவை கூட்டணி சேர்ந்துள்ளன. இதுதவிர ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பலமுனை தாக்குதலுக்கு நடுவே பிரச்சாரத்தை தொடங்கியுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.

ஏசி பேருந்தை பிரச்சார வாகனமாக மாற்றிக்கொண்டு ஒவ்வொரு ஊராக பிரச்சாரம் செய்ய களம் இறங்கி உள்ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திரா மிக நீளமான மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. கும்மிடிப்பூண்டியை தாண்டி உள்ள தடாவில் தொடங்கி அந்த பக்கம் விசாகப்பட்டினம் தாண்டி ஒடிசா எல்லை வரை ஆந்திரா இருக்கிறது. ஆந்திராவில் குப்பம் அருகே உள்ள தமிழ்நாடு எல்லை தொடங்கி ஓடிசா எல்லையில் உள்ள இசாபுரம் வரை சுமார் 1153 கிமீ தூரம் நிலப்பரப்பை கொண்டது.

ஜெகன் மோகன் ரெட்டி அண்மையில் பிரச்சாரம் செய்ய பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, முதியவர் ஒருவர் கையில் மனு ஒன்றை வைத்துக்கொண்டு ஜெகனின் பேருந்தை நோக்கி விடாமல் ஓடிவந்தார்.. இதைக்கண்ட பாதுகாவலர்கள், அவரை தடுத்து நிறுத்தி துரத்த முயன்றனர். ஆனால் அவரே கையெடுத்து கும்பிட்டபடி ஜெகனை சந்திக்க முயன்றார்.. இதை உடனே கவனித்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உடனடியாக பேருந்தை நிறுத்த சொன்னார். கீழே இறங்கி சென்று அந்த முதியவரை சந்தித்து, அவருடைய குறைகளை கேட்டார். அவர் வைத்திருந்த மனுவை வாங்கி படித்து பார்த்த ஜெகன், கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதியவரிடம் வாக்குறுதி அளித்தார்.. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+