கிருஷ்ணா நதிக்கரையில் கொட்டி கிடக்கும் வைரம்.. கூட்டம் கூட்டமாக ஓடி வந்த மக்கள்.. பல கோடி மதிப்பு?
ஹைதராபாத்: கிருஷ்ணா நதிக்கரையில் வைரம் இருப்பதாக கிடைத்த தகவல் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே செல்ல தொடங்கி உள்ளனர்.
ஆந்திர பிரதேசம், சந்தர்லபாடு அருகே கிருஷ்ணா நதிக்கரையில் பருவ மழையின்போது வைர கற்கள் கிடைப்பதாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் படையெடுத்து உள்ளனர்.

கடந்த ஆண்டில் கர்னூலைச் சேர்ந்த விவசாயிக்கு 2 கோடி மதிப்புள்ள பெரிய வைரக்கல் கிடைத்ததாக சொல்லப்படும் நிலையில் பலரும் அங்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம், சட்டெனப்பள்ளி அருகே உள்ள பிகுபண்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் அங்கே வைரத்தை கண்டுபிடித்தனர்.
கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள குடிமெட்லாவில் ஷட்புஜி என்ற அரிய, மதிப்புமிக்க அறுகோண வைரத்தைக் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டது இது சந்தர்லபாடு கோயிலின் படிக்கட்டுகளில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் கிடைத்ததை அடுத்து, கிராமத்தைச் சேர்ந்தவர்களும் இப்போது வைரத்தைத் தேடி வருகின்றனர்.
இந்த வருடமும் அதேபோல் வைரம் கிடைக்கும் என்று தேடி வருகின்றனர். குடும்பத்தினர் இந்த கண்டுபிடிப்பைப் பற்றி பல ஊடகங்களில் கொடுத்த பேட்டியும் டிரெண்ட்.ஆனது மேலும் வைரத்தை நல்ல விலைக்கு விற்க விரும்புகிறார்கள்.
மதிப்பிடப்பட்ட விலை ரூ.50-60 லட்சம் ஆனால் உள்ளூர் வைர வியாபாரிகள் வெறும் ரூ.40 லட்சத்தை மட்டுமே கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் போது மக்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து வைரங்களைக் கண்டுபிடிக்க குடிமெட்லாவுக்கு விரைந்து செல்வது வழக்கமாகிவிட்டது. அதன்படியே இந்த வருடமும் அங்கே வைரத்தை தேடி மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.
தற்போது மழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் சமீபகாலமாக, மாநிலம் முழுவதிலுமிருந்து மக்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க நகரத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குடிமெட்லா கடந்த காலத்தில் அரசர்களால் ஆளப்பட்டது. இங்கே தொலைந்து போன அரச வைரங்கள் அடிக்கடி வெளிவருவதாக வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. சமீபத்தில் ஒரே நாளில் மூன்று வைரங்கள் கிடைத்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணா நதிக்கரையில் வைரம் இருப்பதாக கிடைத்த தகவல் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் கிருஷ்ணா நதிக்கரையில் கூட்டம் அதிகரித்து பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள குடிமெட்லாவில் ஷட்புஜி என்ற அரிய, மதிப்புமிக்க அறுகோண வைரம் இருப்பதாக கூறப்படுகிறது. இங்கே அருகிலேயே கொல்லூர் சுரங்கம் உள்ளதும் இதற்கு காரணம்.
கொல்லூர் சுரங்கமானது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணா நதியின் தென்கரையில் உள்ள சரளை-களிமண் குழிகளின் வரிசையாகும். இங்கு கோல்கொண்டா வைரங்கள் எனப்படும் பல பெரிய வைரங்களை உற்பத்தி செய்ததாக கருதப்படுகிறது. இங்கு சிதறும் வைரங்கள் நீரில் அடித்து வந்து கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள குடிமெட்லாவில் கலப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதை அடிப்படையாக வைத்து கிருஷ்ணா நதிக்கரையில் வைரம் இருப்பதாக கிடைத்த தகவல் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே செல்ல தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications