தெலங்கானா முதல்வராக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி.. பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் தமிழிசை
ஹைதராபாத்: தெலங்கானா முதலமைச்சராக இன்று பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி. காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்று உள்ளனர். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டிக்கு பதவியேற்பு செய்து வைத்தார் ஆளுநர் தமிழிசை .
தெலுங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள்.

தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிபிஐ 1 இடத்தில் வென்றது. ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில்தான் வென்றது. இதனால் ஆட்சியை காங்கிரஸிடம் பிஆர்எஸ் கட்சி பறிகொடுத்தது.
தெலுங்கானா தேர்தல்: இந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கானா தேர்தல் மட்டும்தான் தென்னிந்தியாவில் நடந்த ஒரே தேர்தல் ஆகும். மொத்தமாக 119 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்து உள்ளது. அங்கே சட்டசபை தொகுதிகள் குறைவாகவே உள்ளன என்றாலும் அதே தெலுங்கு காரம் எல்லா தொகுதிகளிலும் தூக்கலாகவே இருந்தது.
அங்கே கடந்த 4 வருடமாக பாஜக - டிஆர்எஸ் (பிஆர்எஸ்) என்ற நிலைதான் இருந்தது. ஆனால் கடந்த 1 வருடமாக அங்கே சிறப்பாக செயல்பட்டு காங்கிரஸ் அடித்து தூக்கி மேலே வந்தது. சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது., இன்னொரு பக்கம் பாஜகவோ பெரிய அளவில் அரசியல் செய்ய முடியாமல்.. எந்த பாயிண்டும் கிடைக்காமல்.. பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் என்று திக்கு தெரியாத காட்டில் தவித்துக்கொண்டு.. கடைசியில் கோட்டையை கோட்டை விட்டது..
காங்கிரஸ் பார்முலா: காங்கிரஸ் கட்சி அதே கர்நாடக வெற்றி பார்முலாவான பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாத உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தது. அதோடு இல்லாமல் ரேவந் ரெட்டி செய்த அரசியல் பெரிய அளவில் அங்கே காங்கிரசுக்கு சாதகமாக மாறியுள்ளது. கர்நாடகாவை தொடர்ந்து தென்னிந்தியாவின் மற்றொரு மாநிலமான தெலங்கானாவிலும் காங்கிரஸ் காலூன்றியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஆர்எஸ்எஸ் பின்புலம்; அம்மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்த ரேவந்த் ரெட்டிதான். இவர் தற்போது காங்கிரஸ்காரராக இருந்தாலும் தொடக்கத்தில் இந்துத்துவவாதியாக இருந்திருக்கிறார். ஒன்றுபட்ட ஆந்திராவின் சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றான உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கல்வியை தாண்டி அரசியலையும் மாணவர்கள் பயின்றார்கள். இதில்தான் ரேவந்த் ரெட்டியும் அரசியல் பயின்றிருக்கிறார். அங்கே அவர் இந்துத்துவா அரசியல். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பில் இணைந்து ரேவந்த் நிர்வாகியாக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தவர் அதன்பின் காங்கிரசில் சேர்ந்தவர். இப்போதும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இவருக்கு வாய்ஸ் இருப்பதாக காங்கிரஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. . 2014-ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 3 வருடங்களில் காங்கிரசில் 2017 இணைந்து.. 6 வருடங்களில் முதல்வர் ஆகி உள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications