"சார் நீங்களா" அதிர்ந்த பெண்.. பாத்ரூமை கூட விட்டு வைக்காமல் ஆசிரியரின் அட்டூழியம்.. ஷாக் வீடியோ
ஆசிரியர் பள்ளியிலேயே மது அருந்திய வீடியோ வைரலாகி வருகிறது
ஹைதராபாத்: "நீங்க ஒரு டீச்சர்.. நீங்களே இப்படி செய்யலாமா" என்று பெண் ஒருவர் கேட்க, அதற்கு அந்த டீச்சர் செய்த காரியம் இருக்கே... அப்படியே ஆந்திரா அதிர்ந்து போய் உட்கார்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பலகா மண்டலில் கிருஷ்ணாபுரம் என்ற பகுதி உள்ளது.. இங்கு மண்டல் பரிஷத் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் கோடீஸ்வர ராவ்.. இவருக்கு குடி பழக்கம் இருக்கிறது.. தினமும் குடித்து கொண்டிருந்தவர், திடீரென குடித்து விட்டு ஸ்கூலுக்கு வர ஆரம்பித்தார்..
இதனால் பல ஆசிரியர்கள் ஷாக் ஆனார்கள்.. ஒருகட்டத்தில், ஸ்கூலிலேயே உட்கார்ந்து தண்ணி அடிக்க ஆரம்பித்துள்ளார். இதையும் சக ஆசிரியர்கள் கண்டுகொள்ளாமலும், நமக்கேன் வம்பு என்று தட்டிக் கேட்காமலும் இருந்துள்ளனர்.

கிளாஸ் ரூம்
இந்நிலையில், ஒருநாள், அந்த பள்ளியில் படிக்கும் மாணவனின் அம்மா ஸ்கூலுக்கு சென்றுள்ளார்.. இந்த ஆசிரியரைதான் சந்திக்க வந்தார்.. ஆனால், கிளாஸ் ரூமில் அவர் இல்லாததால், டீச்சர்களுக்கான அறைக்கு சென்றார்.. அங்கே ஒரு சேரில் உட்கார்ந்து ராவ் தண்ணி அடித்து கொண்டிருந்தார். பக்கத்தில் பிரியாணி பொட்டலம், ஸ்நாக்ஸ் இருந்தன.. இதை பார்த்ததும் உறைந்து போன அந்த பெண் உடனடியாக தன்னுடைய செல்போனில் இதை எடுத்துவிட்டார்.

வீடியோ
அந்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் வெளியிட்டுள்ளார். வீடியோ எடுக்கும்போது அந்த பெண் கேட்கிறார், "நீங்க ஒரு டீச்சர்.. நீங்களே பிள்ளைகள் படிக்கிற இடத்துல தண்ணி அடிக்கலாமா? முறையில்லாமல் நடந்து கொள்ளலாமா? என்று கேட்கிறார்.. அதற்கு அந்த ஆசிரியர், அந்த பெண்ணை அசிங்கமாக திட்ட தொடங்குகிறார்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க.. வீடியோ எடுக்கணுமா? எடுத்துக்கோ.. வேணும்னா என் டிரஸ் எல்லாம் கூட கழட்டறேன் என்று சொல்கிறார்.

பாத்ரூம்
அதுமட்டுமல்ல, அங்கு படிக்கும் மாணவர் ஒருவரிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பள்ளியில் எப்படி நடந்து கொள்வார் என்று கேட்கிறார்.. அதற்கு அந்த மாணவன், ஸ்கூல் பாத்ரூமிலும், ஷெல்ப்களில் மது பாட்டில்கள் இருக்கும்.. அவருக்கு எப்ப வேணுமோ எடுத்து குடிச்சிருப்பார்.. அப்படி தண்ணி அடிச்சால், அவருடைய நிலைமை இன்னும் மோசமா இருக்கும்.. ஒருமுறை என் டிரஸ் எல்லாம் கழட்ட சொல்லிவிட்டு, தண்டனை தந்தார் என்று சொன்னான்..

விளக்கம்
மாணவன் சொன்ன பதிலும், இந்த வீடியோ பதிவும் சோஷியல்மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அவரை ஆந்திர அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது... மேலும் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸும் அனுப்பி உள்ளது. இது சம்பந்தமான புகார்கள் ஆதாரங்களுடன் பள்ளிக்கல்வித்துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications