பிபிசி ஆவணப்படம் திரையிட முயற்சி! ஜாமியா மிலியாவை அடுத்து.. உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் கைது
ஏற்கெனவே ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஆவணப்படத்தை திரையிட முயன்றபோது மாணவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹைதராபாத்: தெலங்கானாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள 'உஸ்மானியா' பல்கலைக்கழகத்தில் குஜராத் கலவரம் குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை திரையிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து நடந்த கலவரத்தில் சுமார் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதே அளவில் மக்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்து வந்தார்.
இதனையடுத்து இந்த கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி ஊடகமான பிபிசி இரண்டு பாகங்களை கொண்ட ஆவணப்படத்தை வெளியிட்டது. ஆனால் இந்த ஆவணப்படம் வெறுப்பு பிரசாரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மட்டுமல்லாது இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடாது என்றும் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

திரையிடல்
அதேபோல இந்நிறுவனங்கள் தங்கள் தளத்திலிருந்து இப்படத்தை நீக்கின. ஆனால், இந்த படம் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறையின் ஆவணங்களின்படிதான் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இதனை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இவ்வாறு ஆவணப்படங்களை முடக்குவது என்பது கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தை பொது வெளியில் திரையிட்டு வருகின்றன. கேரளாவில் பல்வேறு கல்வி நிலையங்களிலும் இந்த படத்தை மாணவர்கள் திரையிட்டனர்.

தாக்குதல்
இதனையடுத்து டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்திலும் இப்படம் திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்தது. மட்டுமல்லாது தடையை மீறி இப்படம் திரையிடப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. ஆனால் இந்த எச்சரிக்கையை மீறி மாணவர் சங்கத்தினர் படத்தை திரையிட்டனர். ஆனால், இம்மாணவர்கள் மீது ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கற்களை வீசி தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல அந்த குறிப்பிட்ட கட்டிடத்தில் மின்வெட்டும் ஏற்பட்டது.

போராட்டம்
அதேபோல, டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும் இப்படத்தை திரையிட SFI மாணவர்கள் முடிவெடுத்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுபுறம் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள பிபிசி தலைமை அலுவலகம் முன்பாக பாஜக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது
இதனையடுத்து நேற்று தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை திரையிட முயன்றனர். ஆனால் இதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனை மீறி திரையிட முயன்ற நிலையில் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications