மீண்டும் மீண்டுமா? தெலுங்கானாவில் பிரதமர் மோடி.. 5வது முறையாகப் புறக்கணித்த முதல்வர் கேசிஆர்!
ஹைதராபாத் : தெலுங்கானாவிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கச் செல்லாமலும், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்வில் பங்கேற்காமலும், அவரை 5வது முறையாகப் புறக்கணித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை வருவதற்கு முன்பாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு சென்று ரூ.11,360 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை செகந்திராபாத் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பரேட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

எய்ம்ஸ் பீபிநகர் மற்றும் ஐந்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும், ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். தெலுங்கானாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. தெலுங்கானாவிற்கு வரும் பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் கேசிஆர் நேரில் சென்று வரவேற்காமலும் புறக்கணித்துள்ளார்.

ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் வருகை தந்த பிரதமர் மோடியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் ஆகியோர் வரவேற்றனர். தெலங்கானா வருகை தந்த பிரதமரை வரவேற்காமல் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீண்டும் புறக்கணித்துள்ளார்.

மத்திய பாஜக அரசை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இன்று தெலுங்கானாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை புறக்கணிப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி 5 முறை தெலுங்கானாவுக்குச் சென்றுள்ளார். ஒரு முறை கூட பிரதமர் நரேந்திர மோடியை, சந்திர சேகர் ராவ் வரவேற்க நேரில் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications