எனது போன் தெலுங்கானா அரசால் ஒட்டுக்கேட்கப்படுகிறது.. ஆளுநர் தமிழிசை பகீர் குற்றச்சாட்டு
ஹைதராபாத்: தனது தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக தனக்கு சந்தேகம் இருப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் புகார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் ராஷ்ட்ரீய தெலுங்கானா சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்.
ஒவ்வொரு முறையும் பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவுக்கு வரும் போதெல்லாம் அவரை நேரில் போய் வரவேற்பு அளிப்பதை முதல்வர் தவிர்த்து வந்தார். இதுவரை 2 அல்லது 3 முறை அது போல் நடந்துவிட்டது. ஒரு முறை முதல்வருக்கு உடல்நலம் சரியில்லாததால் விமான நிலையத்திற்கு வந்து பிரதமரை வரவேற்கவில்லை என முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்தது.

பாஜக நிர்வாகிகள்
அது போல் மற்றொரு முறையும் ஒரு காரணம் சொல்லப்பட்டது. இதற்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். தெலுங்கானாவில் நடைபெறும் நல திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் வந்தாலும் அவரை வரவேற்க முதல்வர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆளுநர் உரை
அது போல் முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநர் மாளிகையில் புகார் பெட்டியை தமிழிசை வைத்தது முதலே இரு தரப்புக்கும் மோதல்தான். குடியரசுத் தின விழாவின் போது கவர்னர் உரை, மாநில அரசால் தவிர்க்கப்பட்டது.

உரிய மரியாதை
ஆளுநருக்கு உரிய மரியாதையை தெலுங்கானா மாநில அரசு கொடுப்பதே இல்லை என்றும் இது ஜனநாயகமற்ற செயல் என்றும் தமிழிசை அவ்வப்போது குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில் தமிழிசையின் போன் ஒட்டு கேட்கப்படுவதாக சந்தேதம் உள்ளதாக அவர் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

தீபாவளி வாழ்த்து
முன்னாள் உதவியாளர் துஷார் தீபாவளி வாழ்த்து சொன்னதிலிருந்து தனது போன் ஒட்டுகேட்கப்படுவதாக சந்தேகம் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு விரோதமான சூழல் தெலுங்கானாவில் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவற்றை எல்லாம் நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறேன் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா, தெலுங்கானா ஆகிய தென் இந்திய மாநிலங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம்












Click it and Unblock the Notifications