நடுங்க வைத்த பெண்.. பேர்தான் "புஜ்ஜி".. கத்தியால் கழுத்தை அறுத்து.. அலறிய சூரியாபேட்டை.. இவரும் தாயா
6 மாத குழந்தையை நரபலி தந்துள்ளார் பெற்ற தாய்
ஹைதராபாத்: பிறந்த 6 மாசமே ஆன குழந்தையை நரபலி கொடுத்துள்ளார் பெற்ற தாய் புஜ்ஜி.. இந்த புஜ்ஜிக்கு தோஷம் இருக்கிறதாக ஜோசியக்காரர்கள் சொல்லி உள்ளனர்.. அதனால், தன்னுடைய 6 மாத குழந்தையை தானே, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று விட்டார்.
தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டையை சேர்ந்த கிருஷ்ணா... இவர் புஜ்ஜி என்பவரை 2வது கல்யாணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் புஜ்ஜிக்கு நாக தோஷம் இருப்பது தெரியவந்துள்ளது.. இதையடுத்து, கிருஷ்ணாவையும், குழந்தையையும் தனியே தங்க வைத்திருந்தனர்..

நாகதோஷம்
இதனால் புஜ்ஜி மேலும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது... கடந்த 6 மாசமாகவே புஜ்ஜி தனிமையில் இருந்து வருகிறார்... எதையோ பறிகொடுத்ததுபோல, பித்து பிடித்தது போலவும் இருந்துள்ளார். இப்படிப்பட் சூழலில்தான், ஒரு ஜோசியக்காரர் புஜ்ஜியிடம், நாக தோஷத்தை போக்க வேண்டும் என்றால், 6 மாச குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்.

நரபலி
இதைக்கேட்ட புஜ்ஜியும், குழந்தையை நரபலி தர தயாரானார்.. இதற்காகவே தினமும், சிவனை நினைத்து ராத்திரி நேரங்களில் வீட்டில் தனியே பூஜை செய்து வந்துள்ளார்... நேற்றைய தினம், தன்னுடைய ரூம் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட புஜ்ஜி, சிவன் படத்திற்கு முன்பாக குழந்தையை கிடத்தினார்.. பிறகு ஒரு கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்தார்.. குழந்தை அலறி அலறி துடித்து உயிரை விட்டது.. அந்த குழந்தையின் ரத்தத்தை எடுத்து சிவனுக்கு காணிக்கையாக படைத்துள்ளார் புஜ்ஜி.

புஜ்ஜி
குழந்தையின் மரண ஓலத்தை கேட்ட குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் பதறி கொண்டு ஓடிவந்தனர்.. கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால், கதவு தட்டியும் புஜ்ஜி திறக்கவில்லை.. பிறகு கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள்.. குழந்தை சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்... உடனடியாக போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து புஜ்ஜியை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்கள்
சமீபத்தில்தான், நன்கு படித்த குடும்பத்தை சேர்ந்த 2 இளம்பெண்கள் நரபலியாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்தது.. அதேபோல, இதே ஆந்திராவில் பெற்ற தாயே வயதுக்கு வந்த 2 மகள்களை அடித்து கொன்று நரபலி தந்த சம்பவமும் நடந்தது.. இதே ஆந்திராவில்தான், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது..

நரபலி
இப்படி, மூடநம்பிக்கையால், நரபலி கொடுக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. எத்தனையோ தம்பதிகள், குழந்தைகள் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், இப்படி ஒரு அநியாய சிசு கொலை அனைவரையும் அதிர வைத்தும் வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications