மடியிலேயே.. பெண்ணை "அலேக்கா" தூக்கி வைத்து கொண்ட அமைச்சர்.. மலைத்து போன மக்கள்.. வீடியோவே வந்துருச்சு
ஹைதராபாத்: தெலுங்கானா தேர்தல் நெருங்கி வரும்சூழலில், பிரச்சாரமும் அம்மாநிலத்தில் சூடுபிடித்து வருகிறது.. அந்தவகையில், மாநில அமைச்சர் ஒருவரின் வீடியோ, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்திற்கு அடுத்த மாதம் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க போகிறது.. தெலங்கானாவை பொறுத்தவரை, ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்..

இப்போதுள்ள சூழலில் அங்கு பிஆர்எஸ், காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் பாஜக என 4 முனை போட்டி நிலவுகிறது என்றாலும், நேரடி போட்டி என்பது, பிஆர்எஸ்ஸுக்கும், காங்கிரஸுக்கும் இடையேதான் நடக்க போகிறது.. சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியானது, ஆட்சியை தக்கவும், இந்த முறையாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.
இதனால், தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடிக்க துவங்கிவிட்டன.. தேர்தல் என்றாலே பிரச்சாரங்கள் களைகட்டும் என்றாலும், மற்ற மாநிலங்களைவிட தெலுங்கானா மாநில பிரச்சாரங்கள், நாட்டு மக்களின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்துவிடும்.
ராஜினாமா: இப்படித்தான் கடந்த முறை தெலுங்கானாவில் நடந்த பிரச்சார கூத்துகளை இந்த நாடே வேடிக்கை பார்த்தது.. ஒரு சுயேச்சை வேட்பாளர், பெட்டி நிறைய செருப்புகளும், ராஜினாமா கடித ஜெராக்ஸ்களையும் கொண்டு வந்தார்.. பிறகு, அங்கிருந்த வேட்பாளர்களிடம், ஒரு ஜோடி செருப்பையும், ஒரு ராஜினாமா கடித ஜெராக்ஸையும் தந்து வாக்கு சேகரித்தார்..
அதேபோல, ராஷ்ட்டீரிய சமிதி வேட்பாளர் ஒருவர், நேராக சலூன் கடைக்கே போய்விட்டார்.. கடையிலிருந்தவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என இறங்கிவிட்டார்.. அப்போது அந்த வழியில் ஒரு குழந்தை திறந்தவெளியில் மலம் கழித்து கொண்டிருந்தது.. இதை பார்த்த அந்த வேட்பாளரோ ஓடிப்போய், அந்த குழந்தையின் அம்மாவிடம் தண்ணீர் வாங்கி, குழந்தைக்கு கால் கழுவிவிட்டார். இந்த வீடியோவெல்லாம் வைரலானதை யாராலும் மறக்க முடியாது.
மல்லா ரெட்டி: இதோ இப்போதுகூட ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் வாக்கு சேகரித்தது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமானவர் மல்லா ரெட்டி..
70 வயதாகிறது.. கட்சியில் சீனியரான இவர், தொகுதி மக்களிடம் நெருங்கியே இருப்பவர். எப்போதுமே கலகலப்பாக பேசக்கூடியவர்.. எந்த விழாவுக்கு சென்றாலும், டான்ஸ் ஆடி, பொதுமக்களின் ஆரவார கரகோஷத்தை பெறுபவர்.. சிலசமயம் ஜூம்பா டான்ஸும் ஆடி, மக்களை திகைக்க வைத்துவிடுவார்..
இந்த வயதிலும் இவரது சுறுசுறுப்பு, இயல்பாக பேசுவது, போன்ற காரணங்களினால், தொகுதி மக்களிடன் நன்மதிப்பை எளிதாக பெற்றிருப்பவர்.. ஒருமுறை இவருக்கு தொகுதி மக்கள் பாலாபிஷேகம் செய்து பரபரப்பையே ஏற்படுத்தியிருந்தனர்.
மூதாட்டி: இந்நிலையில், மேட்சல் தொகுதியில் பிரச்சாரம் மல்லா ரெட்டி பிரச்சாரம் கொண்டிருந்தார்.. அப்போது நிறைய வயதான பெண்கள் அந்த கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.. அதில், ஒரு பெண்மணி, மல்லா ரெட்டிக்கு பின்பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். திடீரென திரும்பி பார்த்த மல்லா ரெட்டி, அந்த மூதாட்டியை தன்னுடைய மடியில் உட்கார சொன்னார்.
ஆனால், அந்த பெண் வெட்கப்பட்டு மறுத்தார்.. உடனே மல்லா ரெட்டி , அலேக்காக தன்னுடைய 2 கைகளிலும் அந்த பெண்ணை தூக்கி, மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.. இதைபார்த்ததும் அங்கிருந்த பெண்கள் கூட்டம், கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.. தன்னுடைய மடியிலிருந்த அந்தப் பெண்ணுக்கு, பூங்கொத்தையும் அமைச்சர் வழங்கினார்.
வெற்றி வாய்ப்பு: இதையெல்லாம் அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து கொண்டிருந்தபோது, கேமராமேனை பார்த்து கட்டைவிரலை காட்டும்படி மூதாட்டியிடம் சொன்னார் மல்லா ரெட்டி. ஏற்கனவே பொதுமக்களின் ஆதரவை, குறிப்பாக பெண்களின் ஆதரவை இயல்பாகவே மல்லா ரெட்டி பெற்றிருப்பதால், இந்த முறை இவருக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications