தெலுங்கானா தமிழ்ச் சங்க மூன்றாம் ஆண்டு விழா.. களைக்கட்டிய ஹைதராபாத்.. கலக்கல் விழா
ஹைதராபாத்: தெலுங்கானா தமிழ்ச் சங்க மூன்றாம் ஆண்டு விழா, நன்னெறிச்சுடர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் கடந்த ஜனவரி 2ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவைத் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.கே.போஸ் தலைமை வகித்தார், துணைத் தலைவர் தருமசீலன், பொதுச்செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் நேரு சாஸ்திரி, துணைப் பொருளாளர் குமாரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச் சங்க துணைத்தலைவர் தருமசீலன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைவர் போஸ் தலைமை உரையாற்றினார்.

இந்த விழாவில் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வகுப்பு மாணவர்களுக்கு நற்சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. ஆத்திசூடி ஒப்புவித்த சுமார் 25 மாணவர்களுக்குத் திருவையாறு ஒளவை கோட்டம் சார்பில் நன்னெறிச்சுடர் விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் அவ்வையார் வேடம் அணிந்து, ஆத்திசூடி ஒப்புவித்தல், திருக்குறள் ஒப்புவித்தல், பாரதியார் கவிதை வாசித்தல், இசை மீட்டல், கண் கவர் கலை நிகழ்ச்சிகள் என ஆண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

முன்னதாக ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று முதல் மூன்று இடங்களை வென்ற சிறுவர்கள் இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நினைவு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. சபையோருக்கான மனமகிழ் வினாடி வினாவில் தமிழ் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமரன், அருணாதேவி, ஜெயலட்சுமி மற்றும் நிர்மலா ஆகியோருக்கு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நன்கொடையாளர்களும் ஆண்டு விழாவில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை அருணா குமாரராஜன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரவு விருந்துடன் 2022 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வழங்கப்பட்டது. தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜ்குமார் சிவாஜி நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை யுவராஜ், குணசேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications