இன்று தெலுங்கு மொழி தினம்.. ஆந்திரா, தெலுங்கானாவில் கொண்டாட்டம்! அறிஞர்களுக்கு மரியாதை
ஹைதராபாத்: உலகம் முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் இன்று தெலுங்கு மொழி தினத்தை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி தெலுங்கு மொழி தினமாக கொண்டாடப்படும் என்று கூறியிருந்தார்.
உலகின் மிகவும் பழமையான மொழிகளில் தெலுங்கும் ஒன்று. 2,000 ஆண்டுகளுக்கும் மேல் வரலாறு கொண்ட இந்த மொழி தென்னிந்தியாவின் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் ஆட்சிமொழியாகவும், மக்கள் மொழியாகவும் இருக்கிறது. இது தவிர தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் குறிப்பிட்ட சதவிகித மக்கள் தெலுங்கு மொழியை பேசுகின்றனர்.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள், தெலுங்கு தினத்தை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக இது குறித்து 104-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய இருந்த பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவின் மற்றொரு பெருமைமிக்க தாய்மொழி தெலுங்கு. ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி தெலுங்கு தினத்தை கொண்டாட உள்ளோம். இதற்காக இப்போதே தெலுங்கு தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கு மொழியின் இலக்கியம், பாரம்பரியத்தில் இந்திய கலாச்சாரத்தின் பல விலைமதிப்பற்ற ரத்தினங்கள் மறைந்துள்ளன. தெலுங்கு மொழியின் பாரம்பரியத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கூறியிருந்தார்.
இந்த நாளில் தெலுங்கு மொழியை வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அறிஞர்களை தெலுங்கு பேசும் மக்கள் நினைவு கூர்ந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளில் தெலுங்கு மொழியின் சிறப்பு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல அரசியல் தலைவர்கள் தெலுங்கு மொழியின் அறிஞர்களுக்கு மரியாதை செலுத்த இருக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications