ஒரு மாணவி.. பப்.. எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர்.. இந்தியாவையே உலுக்கிய கூட்டு வன்புணர்வு! கொடூர பின்னணி!
ஹைதராபாத்: இந்தியாவையே உலுக்கிய ஹைதராபாத் மாணவி கூட்டு வன்புணர்வு குறித்து ஹைதராபாத் கமிஷ்னர் சிவி ஆனந்த் விளக்கி உள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதை பற்றி முழுமையான விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் எம்எல்ஏ ஒருவரின் மகன் உட்பட 6 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் ஆளும் தரப்பிற்கு இந்த வழக்கு பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்த வழக்கில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

என்ன நடந்தது?
கடந்த மார்ச் 28ம் தேதி பெங்களூரில் இருக்கும் 17 வயது கொண்ட மாணவர் , ஹைதராபாத்தில் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பப் தேடி இருக்கிறார். பின்னர் உஸ்மான் அலி கான் என்பவர் மூலம், பப் ஒன்றை ஏற்பாடு செய்து உள்ளார். ஒரு ஆளுக்கு 900 ரூபாய் டிக்கெட் என்ற வீதத்தில் பப்பை புக் செய்து இருக்கிறார். இதையடுத்து அந்த மாணவர் 900 ரூபாய் டிக்கெட்டை 1300 ரூபாய்க்கு இன்ஸ்ட்டா மூலம் பல மாணவ, மாணவியருக்கு விற்று இருக்கிறார்.

டிக்கெட் விற்பனை
100க்கும் மேற்பட்டவர்கள் இந்த டிக்கெட்டை வாங்கி உள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவியும் பார்ட்டி செல்ல ஆசைப்பட்டு டிக்கெட் வாங்கி உள்ளார். மே 28ம் திட்டமிட்டபடி பிற்பகல் 1 மணிக்கு பார்ட்டி நடந்துள்ளது. அதற்கு அந்த மாணவியும், இன்னொரு மாணவியும் ( அவரின் தோழி) வந்துள்ளனர். இந்த நிலையில் பப் உள்ளே இருந்த ஒரு மாணவரும், சதுத்தீன் மாலிக் என்ற 19 வயது இளைஞரும் அந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர்.

மோசமாக நடந்தனர்
நேரம் செல்ல செல்ல அந்த மாணவியிடம் அவர்கள் மிகவும் மோசமாக நடந்துள்ளனர். இதனால் அந்த மாணவி தனது பெண் தோழியுடன் வெளியே சென்றுவிட்டார். வெளியே வந்த அந்த மாணவியின் தோழி, ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதே பப்பில் வேறு ஒரு மாணவர், அந்த மாணவியிடம் பேசி நட்பாகி இருக்கிறார். இந்த நிலையில் வெளியே தனியாக நின்று கொண்டு அந்த மாணவியிடம் நண்பர் போல பழகிய அந்த மாணவர், அருகே வந்து உன்னை காரில் அழைத்து வீட்டில் விடுகிறேன் என்று கூறி மெர்சிடஸ் காரை நோக்கி சென்றுள்ளார். இன்னும் 3 மாணவர்கள் அவர்கள் பின்னே சென்றுள்ளனர்.

காரில் ஏற்றி சென்றனர்
பின்னர்தான் அந்த மாணவிக்கு தெரிந்துள்ளது, தன்னிடம் நட்பாக பழகிய மாணவரும், தன்னை சீண்டிய நபர்களும் ஒரே "கேங்" என்று. அந்த மாணவியை அங்கேயே கட்டாயப்படுத்தி, காரில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் தொடக்கத்தில் இருந்தே திட்டமிட்டு இந்த செயல்களை எல்லாம் செய்துள்ளனர். இதே நேரத்தில் இன்னொரு பக்கம் இன்னோவா காரில் ஒன்றில் இந்த கும்பலின் நண்பர்கள் 4 பேர் அவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளனர். மெர்சிடஸ் காரில் சென்ற அந்த மாணவியிடம் 4 மாணவர்களும் சில்மிஷன்களை செய்துள்ளனர்.

முத்தமிட்டனர்
மாறி மாறி அந்த பெண்ணை முத்தமிட்டுள்ளனர். அதோடு அதை வீடியோவும் எடுத்துள்ளனர். நான்கு மாணவர்களுக்கும் இடையில் சில மோதல் இருந்ததால், எதிர்காலத்தில் தங்களுக்கு உள்ளாகவே மிரட்டிக்கொள்ள வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் கேன்கு பேக்கரி என்ற பகுதிக்கு அந்த மாணவியை அழைத்து சென்று, அவரை இன்னோவா காரில் ஏற்றி உள்ளனர். மற்றவர்கள் இறங்கிவிட, (எம்எல்ஏ மகன் இன்னோவா காரில் செல்லவில்லை), 5 பேர் அந்த மாணவியை ஏற்றுக்கொண்டு பெட்டம்மா கோவில் என்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

வன்புணர்வு
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த பகுதியில், காருக்கு உள்ளேயே வைத்து அந்த மாணவியை சதுத்தீன் மாலிக் என்ற 19 வயது இளைஞரும், 4 மாணவர்களும் வன்புணர்வு செய்துள்ளனர். மாறி மாறி 5 பேரும் மாணவியை வன்புணர்ந்துள்ளனர்.
இதில் அந்த மாணவிக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. மே 28ம் தேதி இந்த சம்பவம் நடந்தாலும் 31ம் தேதிதான் தன்னை சிலர் தவறாக சீண்டியதாக அந்த மாணவி பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார்.

கைது
பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, போஸ்கோ வழக்கில், பாலியல் தொல்லை என்று புகார் பதவி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனையில்தான் அந்த மாணவி தன்னை 5 பேர் வன்புணர்வு செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஒரு நபர்.. ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த உள்ளூர் நிர்வாகி ஒருவரின் மகன் என்று உறுதியாகி உள்ளது.

எம்எல்ஏ மகன்
அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த "ஒரு" எம்எல்ஏவின் மகனுக்கு தொடர்பு உள்ளது. அந்த கார் எம்எல்ஏவின் கார்.ஆனால் அவர் வன்புணர்வு நடந்த இன்னோவா காரில் இல்லை. மாணவிக்கு முதலில் தொல்லை கொடுக்கப்பட்ட மெர்சிடஸ் காரில் இருந்துள்ளார். இருந்தாலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு இவர் மீது பதியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர் இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications
