அமைச்சர் ரோஜாவிடமே "கைவரிசை.." சிசிடிவி உண்மையா?.. திடீர்னு மாயமான செல்போன்.. கடைசியில் ட்விஸ்ட்
நடிகை ரோஜாவின் செல்போன் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது
ஹைதராபாத்: ரோஜா பதவியேற்று ஒருவாரம்கூட ஆகல.. அதற்குள் ஒரு டென்ஷன் ஆகிவிட்டார்.. அவர் மட்டுமல்ல, அவரால் போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகளும் சேர்ந்து டென்ஷன் ஆகிவிட்டார்கள்..
ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா.. ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா, பல அதிரடிகளையும் செய்து வருபவர்..
இந்த அதிரடிகளுக்கு தனக்கு பெரிதும் காரணமாக இருப்பது மறைந்த ஜெயலலிதா தான் என்றும், அவரது பாணியையே தான் கையில் எடுத்து வருவதாகவும் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் சொல்லி வருபவர்.

மாமியார் வீடு
அரசியலில் அடுத்தடுத்த உயரத்துக்கு சென்றலும், அம்மா வீடு ஆந்திரா, மாமியார் வீடு தமிழ்நாடு என்று நெகிழ்ந்து சொல்பவர்.. இவரது அரசியல் அர்ப்பணிப்பும், நகரி தொகுதியில் இவர் மேற்கொண்ட நலப்பணிகளும், மக்களிடம் இவர் பெற்ற நன்மதிப்பும், ரோஜாவுக்கு விளையாட்டு துறையின் அமைச்சர் பதவி தானாக வந்து கிடைக்கும் அளவுக்கு சென்றுள்ளது.. இதனால், பூரிப்பில் இருக்கிறார் ரோஜா.. இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சர் என்றும் பாராமல், ரோஜாவை ஒரு மர்ம நபர் டென்ஷன் ஆக்கிவிட்டார்.

நடிகை ரோஜா
பத்மாவதி விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற விளையாட்டுத்துறை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ரோஜா கலந்து கொண்டார்... கூட்டம் முடிந்ததும் பார்த்தால், செல்போனை காணவில்லை.. இதனால் பதறிபோன ரோஜா சுற்றுமுற்றும் செல்போனை தேடியுள்ளார்... ஆனால் போன் எங்கே போனது என்றே தெரியவில்லை.. இவரது பதற்றத்தை பார்த்த அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளும், விஷயத்தை அறிந்து, அவர்களும் செல்போனை தேட ஆரம்பித்தனர்.. கூட்டம் நடந்த இடமே இதனால் பரபரப்பாகிவிட்டது.

ரோஜாவின் செல்போன்
செல்போன் கிடைத்ததோ இல்லையோ, ரோஜாவின் செல்போன் மாயம் என்று மீடியாக்களில் அதற்குள் செய்திகள் பரபரத்துவிட்டன.. அதுமட்டுமல்ல, தன்னுடைய செல்போனை காணவில்லை என்று போலீசாரிடம் ரோஜா சொன்னதுமே, போலீசாரும் இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அப்போது, எஸ்வி பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்யும் நபர் ஒருவர், டேபிளில் இருந்த ரோஜாவின் செல்போனை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததாம்..

ரோஜா டென்ஷன்
இதையடுத்து அந்த தற்காலிக ஊழியர் இடமிருந்து போலீசார் செல்போனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு பிறகு மற்றொரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. ரோஜாவின் செல்போனை யாருமே திருடவில்லையாம்.. ரோஜாவின் செல்போன் காணாமல் போனது தொடர்பாக எஸ்வி பல்கலைக்கழக காவல் நிலைய உதவி ஆய்வாளர் என்.ரவீந்திரா ஒரு பேட்டி தந்துள்ளார்..

பதறிய ரோஜா
அதில், "அமைச்சர் ரோஜா ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபோது, தன்னுடைய உதவியாளர் ஒருவரிடம் செல்போனை தந்துள்ளார்.. ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் செல்போனை ரோஜா தேடியுள்ளார்.. ஆனால், உதவியாளரிடம் செல்போனை தந்ததை ரோஜா மறந்துவிட்டார்.. உடனே வேறு ஒரு செல்போனில் இருந்து, தன்னுடைய செல்போனுக்கு டயல் செய்து பார்த்தபோதும், செல்போனை கண்டுபிடிக்க முடியவில்லை.. காரணம், மீட்டிங் நடப்பதால் சைலண்ட் மோடில் போட்டிருந்தார்..

அமைச்சர் ரோஜா
அதற்கு பிறகுதான், தன் சட்டைப்பையில் போன் இருப்பதை உணர்ந்த அமைச்சரின் உதவியாளர் போனை திருப்பி தந்தார்.. அதனால், அமைச்சர் செல்போனை யாரும் திருடவில்லை, ஞாபக மறதி காரணமாகவே கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டுவிட்டது" என்று விளக்கம் தந்துள்ளார்.. உண்மையிலேயே செல்போன் திருடுபோனதா? அல்லது ஞாபகமறதியால் குழப்பமா? சிசிடிவி காட்சியில் சிக்கிய ஊழியர் என்றார்களே, அவை அனைத்தும் பொய்யா? என்று தெரியவில்லை.. எதுவானாலும் ரோஜாவின் செல்போன் ரோஜாவிடமே வந்து சேர்ந்துவிட்டதால், எல்லாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்...!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications