Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்ட பாடெல்லாம் போச்சா.. தெலுங்கானாவை துளைத்தெடுத்த தேசிய கட்சிகள்.. "ஹாட்ரிக்" கேசிஆர்? ஒரே டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில், பாரத் ராஷ்டிர சமிதியை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன், காங்கிரஸும், பாஜகவும் கடுமையான நெருக்கடியை தந்துள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது.

பெரும்பாலான, இந்திய மாநிலங்களில் தேர்தல் நடந்தால், காங்கிரஸை பாஜகவும், பாஜகவை காங்கிரஸும் தூற்றி பிரச்சாரம் செய்வது வழக்கம்.. ஆனால், தெலுங்கானாவில், காங்கிரசும், பாஜகவும், பாரதிய ராஷ்டிரா சமிதியை தனித்தனியாக டார்கெட் செய்தன.

 Will BJPs strategy succeed in Telangana and Will KCR retain power again with Hat trick

யாத்திரை: இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸின் முனைப்பு, அதிகமாக தென்படுகிறது.. ராகுல் காந்தியின் பாத யாத்திரை, இந்த யாத்தியையொட்டி, கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது, போன்றவைகளின் தாக்கம் தெலுங்கானாவில் ஏற்பட்டதை உணர முடிந்தது..

இதனால், காங்கிரஸின் செல்வாக்கும் தெலுங்கானாவில் சற்று அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது.. அதனால்தான், பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த மாஜிக்கள் முதல் எம்எல்ஏக்கள்வரை காங்கிரஸை நாடி வரும் நிலைமை ஏற்பட்டது.

பாஜக: பாஜகவை பொறுத்தவரை, மிஷன் சௌத் திட்டத்தில், தெலுங்கானாவை டாப் லிஸ்ட்டில் வைத்திருக்கிறது.. அந்தவகையில், 2 விதமான நம்பிக்கையில் தெலுங்கானாவில் களமிறங்கியது.. ஒன்று, ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த பிரதான வெற்றி, அதுவும், பிஆர்எஸ் கட்சிக்கு சரிசமமாக கிடைத்த வாக்குகளை வைத்தே பிரச்சாரத்தை விரிவுபடுத்தியது..

இரண்டாவதாக, கேசிஆர் குடும்பத்துக்கும், கட்சிக்கும் விசாரணை அமைப்புகளின் மூலம் வைத்த "செக்", அதன்மூலம் நொறுங்கி உடையும் கேசிஆரின் டேமேஜ் போன்றவைகள், தங்களுக்கு சாதகமான வெற்றியை பெற்றுத்தரும் என்று பாஜக பெருத்த நம்பிக்கையில் உள்ளது. பிரதமர் மோடி முதல் அமித்ஷாவை வரை தெலுங்கானா வந்துவிட்டு போனார்கள்..

காங்கிரஸ்: அதுமட்டுமல்ல, பிஆர்எஸ்ஸை தாக்கி பேசும்போது, சந்தடி சாக்கில், காங்கிரஸையும் அட்டாக் செய்ய பாஜக தவறவில்லை. "காங்கிரஸின் பொய் வாக்குறுதிகளை கண்டு தெலங்கானா மக்கள் ஏமாந்துவிட வேண்டாம்" என்று கர்நாடகாவிலிருந்து கொளுத்தி போட்டார் எடியூரப்பா..

ஆக, காங்கிரஸ், பாஜக இரு தரப்புமே ஆளும் கட்சியை அட்டாக் செய்து பிரச்சாரங்களை அதிர வைத்திருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.. மொத்தம் 35,655 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.

ஜனநாயகம்: "தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளது, நாட்டு மக்களின் கவனத்தை திருப்பி வருகிறது..

எப்போதுமே, பொதுத்தேர்தலில் 60 முதல் 65 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடப்பது வழக்கம்.. வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால், எதிர்க்கட்சிகளுக்கு சாதகம் என்ற கருத்து, அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.. காரணம், ஆளும்கட்சி மீதான கோபத்தை இது அம்பலப்படுத்துவதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.. இதுவே குறைவான வாக்குசதவீதம் என்றால், அது ஆளும் ஆட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது..

ஆனால், நம்முடைய மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, இந்த கருத்தெல்லாம் அடிபட்டு போனது வேறு விஷயம்.. அப்போது அதிமுகவின் வாக்கு வங்கி குறையவே இல்லை.. திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைதான் அதிகரித்தது.. திருமங்கலம் தொகுதி போல ரிசல்ட்கள் கிடைப்பது, அரிதான விஷயம்.

அறிகுறிகள்: எனினும், ஓட்டு சதவீதம் அதிகம் இருந்தால் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாகவே கருதப்படுகிறது.. அந்தவகையில், ஆளும் கட்சி மீது அதிருப்தியிருந்தால் தெலுங்கானா மக்கள் அதிகமாக ஓட்டுபோடுவார்கள்.. அல்லது வாக்குப்பதிவு நார்மலாக இருந்தால், தற்போதைய பிஆர்எஸ் ஆட்சியே தொடரும் வாய்ப்புள்ளது..

தெலுங்கானாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் பிரச்சனை, உள்ளிட்ட பிரச்சனைகளை காங்கிரஸும், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து முடித்துள்ள நிலையில்.... கவர்ச்சியான இலவச அறிவிப்புகளை இரு கட்சிகளுமே அவிழ்த்துவிட்டுள்ள நிலையில்... இவையெல்லாம் வாக்குகளாக மாறுமா?

ஹாட்ரிக்: "நாம் எல்லோரும் சேர்ந்து பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம்" என்று கேசிஆர் அன்று சொல்லியிருந்த நிலையில், அவருக்கான வெற்றி வாய்ப்பு கிடைக்குமா? ஹாட்ரிக் அடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+