நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தலைமைச் செயலகத்தை இடிப்போம்.. தெலுங்கானா பாஜக தலைவர் ஆவேசம்!
தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தலைமை செயலகத்தை இடிப்போம் என பாஜக தலைவர் பேசியுள்ளார்.
ஹைதராபாத் : தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்ததும், அனைத்து வகையான நிஜாம் கலாச்சார கட்டமைப்புகளையும் அழிப்போம் என்றும், நிஜாம்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தெலுங்கானா தலைமைச் செயலகத்தை இடிப்போம் என்றும் பாஜக தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலகத்தின் மேற்கூரையினை இடித்து தரைமட்டமாக்குவோம் என பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் பேசியுள்ளார்.
மேலும், அனைத்து வகையான நிஜாம் ஆட்சி கால கலாச்சார அடிமைச் சின்ன கட்டமைப்புகளையும் அழிப்போம் என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

புதிய தலைமைச் செயலகம்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புதிய தலைமைச் செயலகத்தை சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு கட்டியுள்ளது. இந்த கட்டிடம் முதல்வர் சந்திரசேகர் ராவின் பிறந்தநாளான வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த புதிய தலைமை செயலக கட்டிடம் நிஜாம் கால கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தலைவர் ஆவேச பேச்சு
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் குக்கட்பல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டதும், அனைத்து வகையான நிஜாம் ஆட்சி கால கலாச்சார அடிமைச் சின்ன கட்டமைப்புகளையும் அழிப்போம் என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தலைமை செயலகத்தை இடிப்போம்
மேலும், தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தின் குவிமாடங்களில் உள்ள நிஜாமின் கலாச்சார சின்னங்களை அழிப்போம். அதற்கு பதிலாக இந்தியா மற்றும் தெலுங்கானாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பொருத்தமான சின்னங்களை அமைக்க ஏற்பாடு செய்வோம் எனத் தெரிவித்தார். மேலும், முதல்வரின் அதிகாரபூர்வ பங்களாவான பிரகதி பவன் பிரஜா தர்பாராக மாற்றப்படும் என்றும் பண்டி சஞ்சய் தெரிவித்தார்.

மசூதிகளை
மேலும், சாலை விரிவாக்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் வழிபாட்டுத் தலங்களை அரசு இடிக்கும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய பண்டி சஞ்சய் குமார், முடிந்தால் பழைய சாலைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள மசூதிகளை இடித்து தள்ளுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications