பேரிடர் காரணமாக வேளாண்மை மற்றும் உணவு முறையில் பாதிப்பு: உலக நாடுகளுக்கு ஐ. நா எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொரோனா வைரஸ் போன்ற நோய்கள், வறட்சி, வெள்ளம் ஆகியவை மூலம் வேளாண்மை மற்றும் உணவு முறையில் ஏற்படும் எதிர்காலத்திய சமூக அல்லது உளவியல் பாதிப்புகளை எதிர்கொள்ள நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆண்டறி்க்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் பல அதிர்ச்சியான் தகவல்கள் எச்சரிக்கையாக கூறப்பட்டுள்ளது:

Impact on agriculture and diet due to disaster: UN warning to nations around the world

ஐநா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆண்டறி்க்கை

கொரோனா பெருந்தொற்று நோய், தேசிய உணவு-வேளாண் முறையில் உள்ள பலவீனங்களை பரவலாக வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்தக் குறைபாடுகளை சரிசெய்ய உணவுப்பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரிசெய்ய வேண்டும். வேளாண்-உணவு முறை என்பது வேளாண் பொருட்கள் உற்பத்தி, உணவு அளிப்புச் சங்கிலி முறை, போக்குவரத்து மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் குறிப்பதாகும்.

தற்போதுள்ள நிலையில் உலகளவில் 300 கோடி மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு சத்தான உணவு இல்லாமல், சரிவிகித உணவு இல்லாமல் சிரமப்படுகிறார்கள். இதேநிலை நீடித்தால் உலகளவில் மக்களின் வருமானம் மூன்றில் ஒருபகுதியாகக் குறைய வாய்ப்புள்ளது. அப்படி குறைந்தால், மேலும் 100 கோடி மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் சிக்குவார்கள்.

கடந்த ஜூலை மாதம் ஐநா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 7.20 கோடி முதல் 8.11 கோடி வரையிலான மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 1.61 கோடியாகத்தான் இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்று அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் வறுமையிலும், பட்டினியிலும் வாடுவது அதிகரித்துள்ளது.

வறட்சி, வெள்ளம், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு ஆகிய அதிர்ச்சிகளில் இருந்து காக்கும் மேலாண்மைகளான காலநிலையை சரியாகக் கணித்தல், முன்கூட்டியே எச்சரித்தல், முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள், திட்டமிடல் போன்றவை வேளண் உணவு முறையையை பாதுகாக்கும்வழிகளாகும்.

உணவு முறைகளில் உள்ள பாதிப்புகளைக் கண்டறிய உதவுவதற்கு சில பின்னடைவு குறியீடுகளை உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நிறுவியுள்ளது. இந்த குறியீடுகள் ஒரு நாட்டின் முதன்மை உற்பத்தி திறன், உணவு கிடைக்கும் அளவு மற்றும் மக்களுக்கு போதுமான உணவு கிடைப்பது ஆகியவற்றை அளவிடுகின்றன. ஒவ்வொரு நாடும் தங்களுடைய பலவீனங்களை அடையாளம் கண்டு இந்தக் கருவிகள் மூலம் அவற்றைச் சரிசெய்துகொள்ளலாம் என ஐநாவுக்கான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+