10 பக்தர்கள் பலி.. நள்ளிரவில் மலை பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்.. ஆந்திராவில் சோகம்
அமராவதி: ஆந்திராவில் தனியார் பஸ் ஒன்று மலைப்பாதையில் உள்ள பள்ளத்தில் இன்று அதிகாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பஸ்சில் 37 பேர் பயணித்த நிலையில் 10 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சீதாராம ராஜூ மாவட்டம் சிந்தூரு - மரிதுமில்லி மலைப்பாதையில் இன்று அதிகாலையில் தனியாருக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

துலசிபக்கா அருகே 9வது மைல்ஸ்டோனில் உள்ள திருப்பத்தில் தடுப்பு சுவரை இடித்து பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
இதுபற்றி தகவலறிந்தவுடன் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்டு பணியை தொடங்கினர்.
அப்போது 10 பேர் பலியானது தெரியவந்தது. மேலும் 27 பேர் காயமடைந்து இருந்தனர். இவர்களில் சிலர் படுகாயங்கள் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பத்ராசலம் சென்றுவிட்டது அன்னவாரத்துக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். பஸ்சில் 35 பக்தர்கள், 2 டிரைவர்கள் இருந்தனர். நள்ளிரவில் அவர்கள் பயணித்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications