ஆந்திராவில் ஆடி அட்டகாசம்! மருமகனுக்கு 100 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்! இன்னைக்கு ஒரு புடி!
அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளை செய்து பரிமாறி மாமியார் ஒருவர் அசத்தியுள்ளார். அந்த விருந்தோம்பலை பார்த்து மாப்பிள்ளை திக்குமுக்காடிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குள்பட்ட தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஆஷாதா மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு ரத்னகுமாரியின் தாய் வீட்டில் விருந்து வைத்துள்ளனர். இதில் ரவி தேஜாவுக்கு அவருடைய மாமியார் 100 வகையான பச்சரிசி உணவுகளை தயார் செய்து பரிமாறியுள்ளார்.
100 வகையான உணவுகளுக்கு முன்பு உட்கார்ந்திருத்த தம்பதிக்கு சக்லி முதல் மைசூர் பாக் வரை பரிமாறப்பட்டது. ஆஷாதா மாதம் என்பது தமிழில் ஆடி மாதம் போன்றதாகும். ஜூலை மாதத்தின் பிற்பாதியும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியும் ஆஷாதா மாதமாக ஆந்திரம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
விவசாயிகள் புதிய பயிர் வளர்ப்புகளில் ஈடுபடுவார்கள். நீர் நிலைகள் நிரம்பி பூமி செழிக்கும் மாதமாகவும் இந்த மாதம் பார்க்கப்படுகிறது. 100 வகையான பிரம்மாண்ட விருந்து குறித்து பேசிய மருமகன் ரவி தேஜா, இனிப்பு, காரம் என 100 வகை உணவுகளை ஒரே நேரத்தில் கண்டது மகிழ்ச்சி என்றார்.

அந்த உணவுகளை பார்க்கும் போது எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்றே தெரியவில்லை. இது வெறும் ஸ்னாக்ஸ் மற்றும் இனிப்பு போல் தெரிகிறது. மெயின் டிஷ் வேற இருக்கும் போலயே! கடந்த முறை இதே போல் ஒரு குடும்பத்தில் 379 வகையான உணவுகளை மாப்பிள்ளைக்கு பரிமாறி மாமியார் குடும்பத்தினர் அசத்திவிட்டனர். இது பொங்கல் எனப்படும் சங்கராந்திக்கு இந்த விருந்து படைக்கப்பட்டது.
அதில் 40 வகையான சாதங்கள் , 20 வகையான ரொட்டிகள், 40 வகையான கிரேவிகள், 40 வகையான வற்றல்கள், 90 முதல் 100 இனிப்பு, 70 வகையான குளிர்ந்த பானங்கள், சூடான பானங்கள் என உண்பதற்கு நிறைய இருந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications