கடந்த 5 ஆண்டுகளில் 11,820 லாக்கப் மரணங்கள்.... : ஓர் அதிர்ச்சித் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 11,820 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளாது.

கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் லாக்கப் மரணங்களை தடுத்து, அவற்றின் விசாரணைக்கான ஒழுங்கு விதிமுறைகளை ஏற்படுத்துதல் தொடர்பாக டி.கே.பாசு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.

இந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல் ஏ.எம்.சிங்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை, நீதிபதிகள் நிஜ்ஜார், கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது சிங்வி பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார். அவையாவன....

அதிகரிக்கும் மரணங்கள்....

அதிகரிக்கும் மரணங்கள்....

குற்றம்சாற்றப்பட்டவர்களை கைது செய்வது மற்றும் சிறையில் அடைப்பது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.

சித்ரவதை....

சித்ரவதை....

கடந்த 5 ஆண்டுகளில், லாக்அப்களில் 11,820 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 3,532 பேர் போலீசாரின் சித்திரவதையால் இறந்தது கண்டறியப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்....

வழிகாட்டுதல்....

இதனால் லாக்அப் மரணத்தை தடுக்கவும் மற்றும் விசாரணையை ஒழுங்குபடுத்தவும் மேலும் 15 வழிகாட்டுதல்களை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

விளக்கமளிக்க உத்தரவு....

விளக்கமளிக்க உத்தரவு....

இது தொடர்பாக சிங்கி சமர்பித்த விதிமுறைகளை பெற்றுக் கொண்ட நீதிபதிகள், லாக்கப் மரணங்கள் குறித்து கவலை தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+