"பளார்" விட்ட பெண்.. திருப்பி பிளேடால் கீறிய கொடூர கும்பல்.. முகம் முழுக்க 118 தையல்.. கடவுளே!
போபால்: மத்தியப் பிரேத மாநிலத்தில் தன்னை கிண்டல் செய்தவர்களை பளார் என அறைந்த பெண்ணின் முகத்தை ரவுடிகள் ப்ளேடால் கிழித்துள்ளனர். இதனால் அவரின் முகத்தில் 118 தையல் போடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாபில் உள்ள டிடி நகர் பகுதியில் தம்பதிகளான சீமா - சுனில் வசித்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமையன்று, சீமாவும் அவரது கணவர் சுனிலும் வெளியே சென்றுள்ளனர். அப்போது தண்ணீர் வாங்குவதற்கு கணவர் சுனில் ஹோட்டலுக்குள் சென்றிருந்த போது, அவரது மனைவி சீமா வாகன நிறுத்தமிடத்தில் நின்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, சீமாவை பாலியல் ரீதியாக கிண்டல் செய்துள்ளனர்.

ரவுடிகளுக்கு விழுந்த அறை
இதனால் ஆத்திரமடைந்த சீமா, ரவுடிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகமாக, நிதானத்தை இழந்த சீமா என்ற பெண், ரவுடிகளில் ஒருவனை பளார் என்று அறைந்துள்ளார். இதனால் அங்கு சுற்றி இருந்த பொதுமக்கள் ஏராளமானோர் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.

ரவுடிகளால் நேர்ந்த கொடூரம்
இதனிடையே அந்தப் பெண்ணின் கணவர், ஹோட்டலில் இருந்து வந்துள்ளார். அப்போது இருதரப்பிலும் சமாதானம் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென கோபமடைந்த ரவுடிகள், பெண்ணின் முகத்தை ப்ளேடால் கிழித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து மூன்று ரவுடிகளும் ஓடியுள்ளனர். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண்ணுக்கு, முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டுள்ளது. நெற்றி, கண்கள், கன்னம் மற்றும் காதின் கீழ் பக்கம் வரையில் ப்ளேடால் கிழிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பெண் தரப்பில் இருந்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இருவர் கைது
இதனைத்தொடர்ந்து ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், ரவுடிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த ரவுடிகள், ரோஷன், அஜய் ஆலியாஸ் மற்றும் நிகில் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் குற்றவாளிகள் மூவரில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள மூன்றாவது நபரையும் தேடி வருகின்றனர். மேலும், மூன்றாவது குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை சந்தித்த பாஜக முதல்வர்
இதனையறிந்த மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவியாக ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். அதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணான சீமாவுக்கு தேவையான மருத்துவமனை செலவுகளை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தப் பெண் நம் அனைவருக்கும் உதாரணமாக திகழ்வதாக பாராட்டினார். விரைவில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications