ஆசிரியர் திட்டியதால் பள்ளியின் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை - ஆசிரியர் கைது
மும்பை: மும்பையில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த ஆறாம் வகுப்பு மாணவர் பள்ளியிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவி மும்பையில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு மாணவர் கௌரவ் கன்க் (12). வழக்கம் போல நேற்று பள்ளிக்குச் சென்ற கௌரவை, வகுப்பறையில் குறும்பு செய்ததற்காக அவனது வகுப்பு ஆசிரியர் சோமயா மனோகரன் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அம்மாணவர் பள்ளியின் நான்காவது மாடிக்குச் சென்று, வகுப்பறை ஒன்றின் ஜன்னல் வழியே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
தகவலறிந்து விரைந்து வந்த மாணவரின் பெற்றோர் கௌசிக்கின் உடலைக் கண்டு கதறி அழுதனர். பின்னர் அவர்கள், ‘தங்களது மகனைத் தற்கொலைக்குத் தூண்டியதாக' பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசில் புகார் அளித்தனர்.
இதற்கிடையேபள்ளி வளாகத்திலேயே மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த மற்ற மாணவர்களின் பெற்றோர், பள்ளி முன்பு குவிந்தனர். பள்ளி வளாகம் மாணவர்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவன் கௌசிக்கின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனக் குற்றம் சாட்டிய பெற்றோர், ஏற்கனவே தங்களது கோரிக்கையை ஏற்று வகுப்பறை ஜன்னல்களில் கம்பிகள் அமைத்திருந்தால் மாணவனின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்றனர்.
ஆனால், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், ‘இது எப்படி பள்ளியின் அலட்சியத்தால் நேர்ந்தது எனக் கூறமுடியும்? ஆனபோதும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப் படும்' என்றார்.
கௌசிக்கின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஆசிரியர் சோமயா மனோகரனைக் கைது செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications