ஆந்திராவில் மினிவேன் மீது பேருந்து மோதி கோர விபத்து - 15 பேர் பரிதாப பலி; 21 பேர் படுகாயம்! படுகாயம்
ஓங்கோல்: ஆந்திராவில் மினி வேன் ஒன்று பேருந்துடன் நேருக்கு நேராக மோதிய பயங்கர விபத்தில் வேனில் இருந்த 15 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கண்டுகுர் நகரில் இருந்து திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் புறப்பட்டது.
அதில் பெண்கள், குழந்தைகள் என 40 பேர் இருந்தனர். மினி வேன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் மீது எதிரே வந்த பஸ் நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது. இதில் வேனில் இருந்த 15 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 21க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மோதிய வேகத்தில் பஸ்சின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து ஏற்பட்டதும் பஸ் டிரைவரும், கண்டக்டரும் தப்பி ஓடிவிட்டனர். வேனில் காயம் அடைந்த அனைவரும் ஓங்கோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோரச் சம்பவம் குறித்து போலீஸார், "ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பிரகாசம் மாவாட்டம் வோலெட்டிவாரிபாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் தலைகீழாக கவிழ்ந்து பேருந்தில் தீப்பற்றியது. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகினர்.
ஹைதராபாத்தில் இருந்து கண்டுக்குர் நோக்கி வந்து கொண்டிருந்த அந்தப் பேருந்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலோனோர் பமுரு எனும் இடத்திலேயே இறங்கிவிட்டனர். இதனால், இதைவிட பெரியளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர். ஆந்திர பிரதேச போக்குவரத்து துறை மந்திரி சித்தா ராகவ ராவும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications