13 வயது சிறுமியை 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்.. உடந்தையாக இருந்த தாய் உள்பட 12 பேர் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது கணவனுடன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அங்குள்ள ஒரு பள்ளிக்கு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் அண்மையில் சென்றிருந்தனர். பிற ஆண்களிடம் எப்படி பழக வேண்டும்?.. பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகாமலிருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து ஆறாம் வகுப்பு மாணவிகளிடையே அவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

அப்போது, 13 வயது சிறுமி அந்த அதிகாரிகளிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்தாள். தனது தாயார் இரண்டாவதாக ஒரு நபரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது துணையுடன் தன்னை கடந்த 2 ஆண்டுகளாக பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், தாயின் இரண்டாவது கணவரின் மகன் உள்பட சுமார் 40 பேர் இதுவரை தன்னை பலாத்காரம் செய்து, சீரழித்ததாகவும் அந்த சிறுமி கண்ணீருடன் தெரிவித்தாள்.
தற்போது, ஆறாம் வகுப்பு மாணவியான அவள் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் 4 ஆம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார், அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் இந்த பிஞ்சு வயதில் அவள் பலரால் சீரழிக்கப்பட்டது உறுதியானது.
இதையடுத்து, சிறுமியின் தாயார், அவளது இரண்டாவது கணவன், அவரது மகன் உள்பட இதுவரை 12 பேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவர் மீதும் இளம்சிறார் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கோழிக்கோட்டில் உள்ள சிறார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications