மாணவியை வைத்த கண் வாங்காமல் பார்த்ததாகக் கூறி 13 வயது மாணவனை கொன்ற சக மாணவர்கள்
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரு மாணவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்ததற்காக 7ம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்தில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜாபூரில் இருக்கும் நூதன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தவர் கிரண் கோரக்ஷ் சோனாவானே(13). அவர் பள்ளியில் ஒரு மாணவியை பார்த்துக் கொண்டே இருப்பதாகக் கூறி சக மாணவர்கள் சிலர் கடந்த மாதம் 26ம் தேதி அவரின் தலையை முதலில் பெஞ்சிலும் பிறகு மரத்திலும் வேகமாக மோதியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த கிரண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த 1ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிரண் பற்றி அவரது தாய் கூறுகையில்,
என் மகனை பழிவாங்க அவனை கொலை செய்துள்ளனர். என் மகன் எந்த மாணவியையும் வைத்த காண் வாங்காமல் பார்க்கவில்லை. பள்ளியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தனது சகோதரிகள் போன்று என் மகன் என்னிடம் கூறுவான் என்றார்.
முன்னதாக கடந்த 1ம் தேதி ஜல்காவ்ன் மாவட்டம் கிரதில் உள்ள ஜவஹர் வித்யாலயாவில் கிஷோர் ரகு சவான்(11) என்ற 5வது வகுப்பு மாணவர் பள்ளி வளாகத்தில் சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications