இமாசலில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி, 17 பேர் படுகாயம்
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று 400 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர், 17 பேர் படுகாயமடைந்தனர்.
35 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த அந்த பேருந்து கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள ரோக்துராங் என்ற கிராமத்தின் அருகே வரும்போது 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பயணிகள் அனைவரும் மொத்தமாக பள்ளத்தில் விழுந்தனர். உடனே அங்கு வந்த மீட்புப்படையினர், அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பேருந்தின் டிரைவர், கண்டக்டர் உட்பட 15பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து போலீஸ் துணை கமிஷனர் டி.டி.சர்மா கூறுகையில்: "சம்பவ இடத்திலேயே இறந்த சடலங்களுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications