உ.பி. கோரக்பூரில் தொடரும் சோகம்- மேலும் 16 குழந்தைகள் பலி
உ.பி. கோரக்பூர் மருத்துவமனையில் மேலும் 16 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
கோரக்பூர்: உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 16 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் தொடரும் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் 1470 பேர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 310 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 63 குழந்தைகள் கொத்து கொத்தாக மரணித்துப் போனதையடுத்தே இந்த உயிரிழப்புகள் வெளியே தெரியவந்தது.
போதுமான ஆக்சிஜன் சப்ளை செய்யாததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என கூறி 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 16 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மருத்துவர்களோ கவலைக்கிடமான நிலையில் குழந்தைகள் கொண்டுவரப்பட்டதாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டன என விளக்கம் தந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications