எனக்கு 17…உனக்கு 50 ...ஆனாலும் பரவாயில்லை….உ.பியில் வினோத காதல் கூத்து
மீரட்: உத்தரப் பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் 17வயது மாணவன் ஒருவன் , 50 வயது பெண்ணை காதலித்து வருவதுடன், அந்தப் பெண்மணியையே திருமணம் செய்வேன் என பிடிவாதமும் பிடித்து வருகிறானாம்.
இதனால் அந்த பையனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
மீரட்டைச் சேர்ந்த அந்த மாணவன் காதலியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி போலீசில் புகார் மனு ஒன்றையும் கொடுத்துள்ளான்.

”தெய்வீக காதல்!” அய்யா:
அதில், 'நான் 50 வயதாகும் பெண் ஒருவரை காதலிக்கிறேன்; அவருடன் ஆறு மாதங்களாக நெருங்கிப் பழகி வருகிறேன்; அவரையே மணக்க விரும்புகிறேன்; அதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்; எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்' என்று அவன் தெரிவித்திருந்தான்.

என் காதலிக்கு எட்டு குட்டிப் பாப்பா:
மனுவை படித்த போலீசார், அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தனர். எட்டு குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண், ''வாழ்ந்தால், இவரோடு தான் வாழ்வேன்; இல்லையேல், இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்து கொள்வோம்,'' என்றார்.

திருமண வயது:
'அந்தப் பள்ளி மாணவனுக்கு, வயது, 17 தான் ஆகிறது. திருமணம் செய்து கொள்ளும் வயது ஆகவில்லை. எனவே, அவனை மறந்துவிடு' என்று போலீசார் அப்பெண்ணிடம் அறிவுரை கூறினர்.

காதல் வானிலே:
எனினும், அதை ஏற்றுக் கொள்ளாத அப்பெண், கோபத்தில் போலீஸ் நிலையத்திலிருந்து வெளியேறினார்.அங்கு கூடியிருந்த, மாணவனின் உறவினர்கள் அந்த பெண்ணை நையப்புடைத்தனர். போலீசார் தலையிட்டு அவரை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர்.

யாருக்கு திருமண வயதாகனும்?!:
'திருமண வயதாகும் வரை காத்திருப்போம்' என, கூறியுள்ள காதலர்களுக்கு, போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications