ஷாக்.. ப்ளஸ் 2 மாணவனுக்கு திடீர் மாரடைப்பு.. அடுத்த நொடி நிகழ்ந்த சோகம்.. என்ன இது கொடுமை?
மத்திய பிரதேசத்தில் வாள்வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிந்த ப்ளஸ் 2 மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
போபால்: இந்தியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் மாரடைப்பு உயிரிழப்புகள் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், தற்போது மத்திய பிரதேசத்தில் 17 வயதே நிரம்பிய பள்ளி மாணவன் ஒருவன் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
இவ்வாறு தொடர்ந்து நிகழும் இளம்வயது மாரடைப்பு சம்பவங்கள் குறித்து அரசாங்கம் முறையாக ஆராய்ச்சி நடத்தி உண்மையை தெரிவிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து பயங்கரம்..
இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் வயதினர் மத்தியில் இந்த மாரடைப்பு அதிகரித்திருக்கிறது. கல்லூரி மாணவி மாரடைப்பால் மரணம்; கபடி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு போன்ற செய்திகள் அன்றாடம் கேட்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டன. திடீரென இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரித்ததற்கான காரணம் தெரியாமல் மருத்துவர்களே விழிபிதுங்கி நிற்கின்றனர். கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தெலங்கானாவில் 35 வயதுக்கு உட்பட்ட 11 பேர் இதுபோன்ற திடீர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.

தடுப்பூசி
குறிப்பாக, கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகே இதுபோன்ற மாரடைப்புகளை அதிக அளவில் காண முடிகிறது. அண்மையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இந்த தகவலை உறுதி செய்தார். இது ஒருபுறம் இருக்க, கொரோனா தடுப்பூசிகளால்தான் இந்த மாரடைப்பு ஏற்படுவதாக ஒரு கூற்று பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரிட்டனை சேர்ந்த இதய மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா, கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாரடைப்பை ஏற்படுத்துவதாக அண்மையில் தெரிவித்தார்.

ப்ளஸ் 2 மாணவர்..
இந்நிலையில்தான், அடுத்து ஒரு சோக சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜனைச் சேர்ந்தவர் மயங்க் (17). ப்ளஸ் 2 படித்து வந்தார். இவர் அங்குள்ள மகாகாளீஸ்வர் கோயில் பூசாரியின் மகன் ஆவார். எனவே, அந்தக் கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவிலும் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் மயங்க் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், நேற்று அந்தக் கோயிலில் நடைபெற்ற 'ரங் பஞ்சமி' திருவிழாவில் மயங்க் கலந்து கொண்டார்.

வாள் வீச்சு.. பரிதாபம்
திருவிழாவின் ஒருபகுதியாக, சாமி சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மயங்க், கோயிலில் இருந்த ஒரு பெரிய வாளை எடுத்து சுழற்றி சாகசத்தில் ஈடுபட்டார். இதை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ரசித்தனர். பின்னர், சிறிது நேரத்தில், அவர் அருகில் இருந்தவரிடம் வாளை கொடுத்துவிட்டு அங்கிருநது சென்றுவிட்டார். ஊர்வலம் நடப்பதால் இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து, கோயில் வாசல் அருகே மாணவன் மயங்கி கிடந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இநத சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications