தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்த ஐஐடி மாணவர்: ஒரே மாதத்தில் 2வது மர்ம சாவு
கான்பூர்: கான்பூரில் உள்ள ஐஐடியில் படித்துக் கொண்டிருந்த ஆந்திர மாநில மாணவர் சாய்குமார் ரெட்டி ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாஷம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜி. சாய்குமார் ரெட்டி(19). அவர் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் இரண்டாம் ஆண்டு பி.டெக். படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரி அருகே உள்ள அன்வர்கஞ்ச்-மந்தனா தண்டவாளம் அருகே ரெட்டி பிணமாகக் கிடந்ததை போலீசார் நேற்று காலை கண்டுபிடித்தனர்.
தலையில் அடிபட்டதால் அவர் இறந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கல்லூரி பேராசிரியர் ஏ.கே. கோஷ் கூறுகையில்,
ரெட்டியின் உடல் துண்டுகளாக ஆகவில்லை. அவர் எதிர்பாராவிதமாக ரயிலில் அடிபட்டிருக்கலாம். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே ஒரு தாபா உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
புத்தாண்டையொட்டி கடந்த 31ம் தேதி நள்ளிரவில் மாணவர்கள் பார்ட்டி கொடுத்து கொண்டாடியுள்ளனர். அந்த பார்ட்டியில் சில மாணவர்கள் குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளனர். ரெட்டியும் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் என்று கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக கடந்த மாதம் 1ம் தேதி இதே கல்லூரியில் எம்.டெக். படித்து வந்த மோஹித் குமார் ஆர். போஹதே வளாகத்திலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது என்றும், அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications