கண்ணை மறைத்த குடிபோதை.. ஓடும் ரயிலில் பெண்ணுக்கு தொல்லை.. அத்துமீறிய 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் குழந்தையுடன் வந்திருந்த பெண்ணிடம் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அத்துமீறி நடந்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தவறாக நடக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

எம்எல்ஏக்களின் ரயில் பயணம்
மத்திய பிரதேச மாநிலம் கோட்மா சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சுனில் சராப். இதேபோல் சாத்னா சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர் சித்தார்த் குஷ்வாகா. இவர்கள் 2 பேரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்நிலையில் நேற்று எம்எல்ஏக்களான சுனில் சராப் மற்றும் சித்தார்த் குஷ்வாகா ஆகியோர் ரெவான்சால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர். இருவரும் ஏசி கோச்சில் பயணம் செய்தனர்.

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு தொல்லை
இந்த வேளையில் ரயிலில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் அந்த கோச்சில் பயணம் செய்தார். அப்போது எம்எல்ஏக்களான சுனில் சராப், சித்தார்த் குஷ்வாகா ஆகியோர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் செய்வதறியாது திகைத்தார்.

கணவரிடம் புகார் சொன்ன பெண்
மேலும் அவர் தனது கணவருக்கு போன் செய்து சம்பவம் பற்றி தெரிவித்தார். இதையடுத்து பெண்ணின் கணவர் சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சரை டேக் செய்து ட்விட்டரில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 354 என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குடிபோதையில்...
மேலும் உடனடியாக அந்த பெண்ணுக்கு வேறு இருக்கை மாற்றி கொடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் எம்எல்ஏக்கள் இருவரும் குடிபோதையில் கர்னி ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications