ஆந்திராவில் மீண்டும் சோகம்.. விசாகப்பட்டினத்தில் கேஸ் கசிவால் இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் கேஸ் கசிந்ததில் இருவர் பலியாகிவிட்டனர். 4 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
விசாகப்பட்டினத்தில் சைனார் லைப் சயின்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை கேஸ் கசிவு ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறி இரு தொழிலாளர்கள் பலியாகிவிட்டனர்.

மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த கேஸ் கசிவிற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் எல்ஜி கெமிக்கல் நிறுவனத்தில் நடந்த கேஸ் கசிவால் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications