குவியல் குவியலாக தங்கம்.. 45 வீட்டு மனை, 2 சொகுசு வீடு.. கோடிகளை குவித்த அரசு ஊழியர்
புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளர் பிரதீப் குமார் ராத் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 2 சொகுசு அடுக்குமாடி வீடுகள் மற்றும் 45 பிளாட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் ஒரு கிலோ தங்கம்., 1.62 கோடி ரொக்கம், கார் என பல சொத்துக்கள் இருந்ததை கண்டு அதிகாரிகள் ஆடிப்போயுள்ளனர்.
ஒரு அரசு ஊழியர் கொள்ளையடித்தால் கூட இவ்வளவு சொத்து வாங்க முடியுமா என்று வாயை பிளக்க வைத்துள்ளார் ஒருவர். ஒடிசா மாநிலத்தில் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய பிரதீப் குமார் ராத் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைக் குவித்துள்ளார். இவரது சொத்து மதிப்பை கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆடிப்போயிருக்கிறார்கள்.

பிரதீப் குமார் ராத், 1991ஆம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தில் ரூ.2000 மாத சம்பளத்துடன் அரசு பணியில் சேர்ந்துள்ளார். அதன் 2001ஆம் ஆண்டு வரையில் உதவி பொறியாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஒடிசாவின் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளராக பதவியுயர்வு பெற்றார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும், இவருக்கு பல கோடி சொத்துக்கள் இருப்பதாகவும் ஒடிசா மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் பறந்தன.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் உண்மை என்று தெரியவந்ததால், ஒடிசா பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் (OBCC) கூடுதல் தலைமைப் பொறியாளரான பிரதீப் குமார் ராத், கட்டாக் நகரில் உள்ள தலைமைக் கட்டுமானப் பொறியாளர் அலுவலகத்தில் ஒடிசா மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாரால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பிரதீப் குமார் ராத் சேர்த்த சொத்துக்கள் குறித்து அதிரடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒடிசா முழுவதும் சோதனை நடத்த முடிவு செய்தார்கள். இதையடுத்து சிறப்பு நீதிபதியின் உத்தரவின் பேரில், பிரதீப் குமார் ராத் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 12 வெவ்வேறு இடங்களில் சோதனை நடந்தது. 9 டிஎஸ்பிகள் மற்றும் 11 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சோதனை நடந்தது.
ஓடிசாவின் இரண்டாவது பெரிய நகரமான கட்டாக் நகரின் சத்ய விஹாரில் உள்ள அவரது வீடு, புவனேஸ்வரின் சந்திரசேகர்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, ஜகந்நாத்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு , கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியம் அருகே உள்ள அவரது அலுவலகம் மற்றும் அவரது தந்தையின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இதுதவிர ஒடிசாவின் அகர்பாடா மற்றும் ராண்டியா சாசன், ஜாஜ்பூர், கோர்டா மற்றும் கட்டாக் ஆகிய இடங்களில் கட்டி முடிக்கப்படாத கட்டிடங்கள், ஜாஜ்பூர் மற்றும் சாஸ்திரி நகர் (புவனேஸ்வர்) ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்களின் இரண்டு வீடுகள் மற்றும் நயபள்ளியில் (புவனேஸ்வர்) உள்ள வீடு என 12 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
இன்று நடந்த தொடர் தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சோதனையில் புவனேஸ்வரில் 2 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், 45 பிளாட்டுகள் ( இதில் 3 வீடுகள் ரூ. 1 கோடி மதிப்புள்ளவை) போன்றவை சட்ட விரோதமான முறையில் சொத்துக்கள் என்பதை கண்டுபிடித்தனர்.
இதுதவிர தலைமைப் பொறியாளரான பிரதீப் குமார் ராத்துக்கு ஒரு மருந்துக் கடை, ஒரு கிரஷர் யூனிட், தங்கம் தோராயமாக 1 கிலோ மற்றும் வங்கியில் மொத்த டெபாசிட்கள் ரூ.1.62 கோடிக்கு மேல் உள்ளன. இதுதவிர 2 நான்கு சக்கர வாகனங்கள், 2 ஜேசிபிகள், 1 எக்ஸ்கவேட்டர், 1 ராக் பிரேக்கர் போன்றவை இருந்தன. இன்னும் எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை முழுமையாக கணக்கிட முடியாத அளவிறகு பிரதீப் குமார் ராத்துக்கு சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பிரதீப் குமார் ராத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ள போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் எத்தனை கோடி சொத்துக்கள் சேர்த்துள்ளார் என்பது குறித்து தெரியவரும் என்பதால், அதற்கு தற்போது தயாராகி வருகிறார்கள். ஒடிசாவில் அரசு அதிகாரி ஒருவர் பல கோடி சொத்துக்களுடன் பிடிப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற அரசு ஊழியர்களும் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications