உதவிய அமேசான் நிறுவனம்.. புல்வாமா தாக்குதலை பயங்கரவாதிகள் திட்டமிட்டது எப்படி? ஷாக் தகவல்
ஜம்மு காஷ்மீர்: 2019 புல்வாமா தாக்குதலுக்கு ஐஇடி வகை வெடிகுண்டுகள் தயாரிக்க பயங்கரவாதிகளுக்கு இ-காமர்ஸ் நிறுவனம் உதவி செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் வரும் காலத்தில் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதை கண்காணிக்கும் எப்ஏடிஎஃப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது காரை மோத விட்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த தாக்குதலை திட்டமிட்டு ஜெய்ஷ் இ முகமது (ஜேஇஎம்) பயங்கரவாத அமைப்பு தான் நடத்தியது. இது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பாகும்.
இந்நிலையில் தான் சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாத நிதி உதவியை கண்காணிக்கும் எப்ஏடிஎப் (FATF) சார்பில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக திடுக்கிட வைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ‛‛இந்தியாவில் கடந்த 2019ல் புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக 2022ல் கோரக்பூர் கோவில் தாக்குதல் (ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத தாக்குதல்) நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல்களுக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள், ஆன்லைன் கட்டண சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் ஐஇடி வகை குண்டு பயன்படுத்தப்பட்டது. இதற்கு மூலப்பொருளாக இருந்த அலுமினிய பவுடர் இ-காமர்ஸ் நிறுவன தளம் அமேசான் மூலமாக பெறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர்.
அதேபோல் 2022 கோரக்பூர் கோவில் தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தினர். இதற்கான பணப்பரிமாற்றத்துக்கு PayPal பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் பணப்பரிமாற்றத்துக்கான செயலி மூலம் ரூ.6.7 லட்சம் மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை அமைப்புகள் கண்டறியாமல் இருக்க விபிஎன் சேவைகளைபயன்படுத்தி உள்ளனர். அதன்பிறகு அந்த நபரின் பேபால் சேவை நிறுத்த வைக்கப்பட்டது.
இப்படி பயங்கரவாதிகள் ஆன்லைன் வர்த்தக சேவை மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை தவறான பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் இல்லாவிட்டால் உலகம் முழுவதும் பிரச்சனையாக மாறலாம் என வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications