உக்ரைன் போர் களத்தில் தவித்த 800 பேரை இந்தியா மீட்டு வந்த 24 வயது பெண் பைலட்
கொல்கத்தா: உக்ரைன் போர் களத்தில் தவித்த இந்தியர்களை மத்திய அரசு ‛ஆபரேஷன் கங்கா' மூலம் தனியார் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் மீட்டது. இந்த மீட்பு நடவடிக்கையின்போது 6 விமானங்களில் 24 வயது பெண் பைலட் 800 பேரை மீட்ட தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. தொடர்ந்து 3வது வாரமாக போர் தொடர்கிறது. இதனால் ஏராளமான மக்கள் உக்ரைன் போர்களத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கி தவித்த மாணவர்கள் உள்பட இந்தியர்களை மத்திய அரசு ஆபரேஷன் கங்கா மூலம் மீட்டுள்ளது. போர் நடப்பதால் உக்ரைனில் இருந்து வெளியேறிய மாணவர்கள் அண்டை நாடுகளான ருமேனியாவின் புக்காரெஸ்ட், ஹங்கேரியின் புத்தாபெஸ்ட், போலந்தின் ரிசோ, சுலோவாகியாவின் கோசிஸ் நகர்களில் இருந்து விமானங்களில் தாயகம் திரும்பினர்.

24 வயது பெண் பைலட்
இந்த 4 நாடுகளில் மாணவர்களின் மீட்பு பணிகளை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். இதில் இந்தியர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட பிற நாட்டு மாணவர்களையும் மத்திய அரசு மீட்டு வந்தது. இந்நிலையில் தான் ஆபரேஷன் கங்கா திட்டத்தில் 24 வயது பெண் பைலட் 800 பேரை மீட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

6 விமானங்களில்
கொல்கத்தாவை சேர்ந்தவர் மஹாஸ்வேதா சக்கரபோர்த்தி (வயது 24). ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிப்ரவரி 24ல் போர் நடவடிக்கையை துவங்கிய பிறகு பிப்ரவரி 27 முதல் மார்ச் 7 ம் தேதி வரை உக்ரைனில் தவித்த இந்தியர்களை 6 விமானங்களில் மீட்டு வந்தார். இவர் ஹங்கேரியில் இருந்து 2 முறையும், போலந்து நாட்டில் இருந்து 4 முறையும் மாணவர்களை மீட்டு வந்திருந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் விமானத்தில் பைலட்டாக பணிபுரிந்து வருகிறார்.

ரியல் ஹீரோக்கள்
இதுபற்றி மஹாஸ்வேதா சக்கரபோர்த்தி கூறுகையில், ‛‛இது ஒரு வாழ்நாள் அனுபவம். நான் மீட்டதில் பல மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் போரின் போது துயரங்களை சந்தித்து இருந்ததை என்னால் உணர முடிந்தது. பசி, தாகம், மனஅழுத்தம், பயம், பதற்றத்துடன் போர் களத்தில் பரிதவித்து மீண்டு வந்துள்ளனர். உண்மையில் இவர்கள் ரியல் ஹீரோக்கள்.

மறக்க முடியாது
ஆபரேஷன் கங்கா திட்டத்தின்போது தினமும் 13 முதல் 14 மணிநேரம் விமானத்தில் பறக்க வேண்டியிருந்தது. ஆனால் மாணவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இதை செய்தது எனக்கு மனச்சோர்வை ஏற்படுத்தவில்லை. 21 வயது மாணவி உடல்நக்குறைவில் அரை மயக்கத்தில் என் கையை பற்றிக்கொண்டு தாயிடம் கொண்டு செல்லும்படி உருக்கமாக கூறிய தருணத்தை என்னால் மறக்க முடியாது'' என்றார்.

பயணம் துவங்கியது எப்படி
நான் பணியாற்றும் விமான நிறுவனத்தில் இருந்து எனக்கு நள்ளிரவு போன் வந்தது. ஆபரேஷன் கங்கா திட்ட பைலட்டாக தேர்வாகி உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த 2 மணிநேரத்தில் கிளம்பி பணியை துவக்கினேன். இவர் இந்திரா காந்தி தேசிய ஊரான் அகாடமியில் பயின்றார். கொரோனா காலக்கட்டத்தில் இந்தியாவின் வந்தே பாரத் திட்டத்தில் செயல்பட்டார். வெளிநாட்டில் இருந்து ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவி, புனேவில் இருந்து கொல்கத்தா உள்பட பிற நகரங்களுக்கு கொரோனா தடுப்பூசி கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது போர் நடக்கும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் ‛ஆபரேஷன் கங்கா' திட்டத்திலும் செயல்பட்டு 800 இந்தியர்களை மீட்டு வந்துள்ளார். இவரது தாய் தானுஷா, மேற்கு வங்க மாநில பாஜக மகளிர் அணி தலைவியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications