கழுத்தை நெறித்த கணவனை கத்தியால் குத்திக் கொன்ற இளம்பெண்
அய்ஸ்வால்: மிசோரமில் தனது கழுத்தை நெறித்த கணவனை இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
மிசோரம் மாநிலம் மாமித் மாவட்டத்தில் உள்ள கவுர்தா நகர் அருகே இருக்கும் முவால்துவாம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் மோகன். அவரது மனைவி கோரிதி என்ற பியாகி(25). மோகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை கணவனும், மனைவியும் வீட்டில் இருந்து கிளம்பி பண்ணைக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு குடிசையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பியாகி ராம் மோகனை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் பியாகியிடம் விசாரித்தபோது ராம் மோகன் தனது கழுத்தை நெறித்ததாகவும் பதிலுக்கு அவரை கத்தியால் குத்திக் கொன்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் பியாகியை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications