ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி சு.சுவாமி மனு- சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ப. சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரிக்கக் கோரி சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
2008-ல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் ஆ. ராசா. அவர் விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு என்பது புகார்

ப.சி.க்கும் தொடர்பு -சுவாமி
அப்போது நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் இதற்கு துணைபோனதாகவும் கூறி சுப்ரமணியன் சுவாமி விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் விசாரணை நீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மறுபரிசீலனை மனு
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி மறுபரிசீலனை மனுத்தாக்கல் செய்தார். அதையும் டிசம்பர் 11-ந் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேல்முறையீட்டு மனு
இதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி பெஞ்ச் விசாரணை
இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது.

மனு தள்ளுபடி
அப்போது, ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்த மனுவை அனுமதிக்க கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறிய நீதிபதிகள் சுப்ரமணியன் சுவாமியின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications