திமுக, காங்கிரஸ் கூட்டணியை ஆட்டம் காண வைக்குமா 2ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு?

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதனால் திமுக காங்கிரஸ் கட்சிகளை இந்த தீர்ப்பு ஆட்டம் காண வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதனால் திமுக காங்கிரஸ் கட்சிகளை இந்த தீர்ப்பு ஆட்டம் காண வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலா ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.

இதன் காரணமாக, அரசுக்கு, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மெகா ஊழல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தோல்விக்கு காரணம்

காங்கிரஸ் தோல்விக்கு காரணம்

இதுவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்த முறைகேடு தொடர்பான வழக்குகளை, டெல்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வருகிறார்.

2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு

2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு

இந்த வழக்கின் விசாரணை, ஏப்ரல் 26ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.

தொடர்புடையவர்கள் வருகை

தொடர்புடையவர்கள் வருகை

இந்த வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, ராஜ்யசபா எம்பி கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் ஆஜராக டெல்லி சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். தீர்ப்பை முன்னிட்டு டெல்லியில் கனிமொழி மற்றும் ஆ ராசாவின் ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.

அரசியல் ஆட்டத்தில் தீர்வு

அரசியல் ஆட்டத்தில் தீர்வு

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு காங்கிரஸ் மற்றும் திமுகவின் அரசியல் ஆட்டத்தில் அதிர்வை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஆர்கே நகர் தொகுதிக்கு இன்று நடைபெற்று வரும் தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது திமுக.

தேர்தலில் எதிரொலிக்கும்

தேர்தலில் எதிரொலிக்கும்

திமுகவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் ஆர்கே நகர் இடைத்தேர்தலிலும் அது எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. ஒரு வேலை சாதகமாக தீர்ப்பு வந்தாலும் அதுவும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

திமுகவுக்கு நெருக்கடி

திமுகவுக்கு நெருக்கடி

இதனால் திமுகவுக்கு இது ஒரு நெருக்கடியான தருணமாக பார்க்கப்படுகிறது. தீர்ப்பு பாதகமாக வந்தால் காங்கிரஸ் தலைவராக உள்ள ராகுல்காந்தி திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மணிவண்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+