ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்கள்..வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்திய இஸ்ரோ..ஏன் முக்கியம்?
ஸ்ரீஹரிகோட்டா: ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள் இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 450 கி.மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி சுற்று வட்டப் பாதையில் செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் மற்றும் ஒன்வெப் நிறுவனம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்வெளித்துறையில் பல்வேறு வியத்தகு சாதனைகளை புரிந்து வருகிறது.
பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

விண்ணில் ஏவப்பட்டது
அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்3-எம்3' என்ற ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. இந்த ராக்கெட்டில் இங்கிலாந்துக்கு சொந்தமான ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இன்று காலை இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

36 செயற்கை கோள்கள்
ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டு இருந்தது. வணிக நோக்கிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதல்கட்டமாக, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் இரண்டாவது கட்டமாக இன்று 36 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இது 18-வது முறை
தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டுள்ள 36 செயற்கைக்கோள்களின் 5,805 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் இந்த செயற்கை கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஒன்வெப் நிறுவனம் செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவது இது 18-வது முறை என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு இறுதிக்குள்
நடப்பு ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக இந்த நிறுவனம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோவை பொறுத்தவரை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. முன்னதாக SSLV-D2/EOS07 திட்டத்தை கடந்த மாதம் இஸ்ரரோ நிறைவேற்றியது. ஒன்வெப் நிறுவனத்தை பொறுத்தவரை நடப்பு ஆண்டில் 616 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. சர்வதேச சேவைக்கு தேவையான அளவு செயற்கை கோள்கைகளை நடப்பு ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தி விடுவோம் என்று தெரிவித்துள்ளது.

முதல் முறையாக நிறைவு செய்திருக்கிறது
36 செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்படதன் மூலம், பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் தங்கள் நிறுவனம் செயற்கை கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதை சர்வதேச அளவில் முதல் முறையாக நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஒன்வெப் நிறுவனம் இந்த திட்டம் மிக முக்கியமான மைல் கற்களில் ஒன்றாக இருக்கும் தெரிவித்துள்ளது. ஒன்வெப் நிறுவனத்தை பொறுத்தவரை சர்வதேச தொலைத்தொடர்பு நெட்வொர்க் நிறுவனமாகும். அரசு மற்றும் பிசினஸ் அமைப்புகளுக்கு கனெக்டிவிட்டி அளிக்கும் பணியை இது செய்து வருகிறது. இந்த ஒன்வெப் குழுமத்தில் பாரதி என்டர்பிரைசஸ் நிறுவனம் மேஜர் முதலீட்டாளராக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications